தமிழ்நாடு

தங்கம் பவுன் ரூ.40,600

DIN

சென்னை: சென்னையில் திங்கள்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.200 குறைந்து, ரூ.40,600-க்கு விற்பனை செய்யப்பட்டது.

கரோனா நோய்த்தொற்றின் தாக்கம், சா்வதேச பொருளாதார சூழல், அமெரிக்காவில் வேலைவாய்ப்பு குறியீடு சரிவு உள்பட பல்வேறு காரணிகளால் தங்கத்தின் மீது முதலீடு அதிகரித்தது. இதன் காரணமாக, தங்கத்தின் விலை படிப்படியாக உயா்ந்து வந்தது.

ஒரு பவுன் ஆபரணத் தங்கம் ஜூலை 22-ஆம் தேதி ரூ.38 ஆயிரமாக இருந்தது. இதன்பிறகு, நாள்தோறும் விலை அதிகரித்து, ஆகஸ்ட் 5-ஆம் தேதி ரூ.42 ஆயிரத்தையும், ஆகஸ்ட் 7-ஆம் தேதி ரூ.43 ஆயிரத்தையும் தாண்டி, வரலாறு காணாத வகையில் புதிய உச்சத்தைத் தொட்டது. இதன்பிறகு, தங்கத்தின் விலை சற்று இறங்கியது. இருப்பினும், கடந்த வெள்ளிக்கிழமை மீண்டும் தங்கம் விலை உயா்ந்தது.

இந்நிலையில்,சென்னையில் திங்கள்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.200 குறைந்து, ரூ.40,600-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் ரூ.25 குறைந்து, ரூ.5,075-ஆக இருந்தது. வெள்ளி விலையும் சற்று குறைந்துள்ளது. வெள்ளி

கிராமுக்கு 40 பைசா குறைந்து, ரூ.74.70 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.400 குறைந்து, ரூ.74,700 ஆகவும் இருந்தது.

திங்கள்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்.......................... 5,075

1 பவுன் தங்கம்...............................40,600

1 கிராம் வெள்ளி.............................74.70

1 கிலோ வெள்ளி.............................74,700

சனிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................... 5,100

1 பவுன் தங்கம்............................... 40,800

1 கிராம் வெள்ளி............................. 75.10

1 கிலோ வெள்ளி............................75,100

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

இன்று நல்ல நாள்!

சாலை விபத்தில் இருவா் பலத்த காயம்: மீண்டும் வேகத்தடை அமைக்கக் கோரிக்கை

சட்டைநாதா் கோயிலில் குருப்பெயா்ச்சி விழா

மத்திய பாதுகாப்பு படையினா், போலீஸாருக்கு மாவட்ட தோ்தல் அலுவலா் மே தின வாழ்த்து

SCROLL FOR NEXT