முகப்பு
தமிழ்நாடு

சென்னையில் கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் 12 ஆயிரமாக உயர்வு

சென்னையில் கரோனா பாதித்து சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி 12 ஆயிரமாக உயர்ந்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:08 PM
சென்னையில் கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் 12 ஆயிரமாக உயர்வு
பகிர்:


சென்னையில் கரோனா பாதித்து சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி 12 ஆயிரமாக உயர்ந்துள்ளது.

கடந்த ஒரு சில நாள்களாக சென்னையில் கரோனா பாதிப்புக்குள்ளாவோரின் எண்ணிக்கை ஆயிரத்துக்கு மேல் பதிவாகி வரும் நிலையில், கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை கடந்த வாரங்களில் 11 ஆயிரத்துக்குக் குறைந்திருந்த நிலையில் தற்போது 12 ஆயிரமாக உயர்ந்துள்ளது.

அதிகபட்சமாக அம்பத்தூரில் 1529 பேரும், கோடம்பாக்கத்தில் 1330 பேரும், அண்ணாநகரில் 1305 பேரும், அடையாறில் 1157 பேரும் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

சென்னையில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களில் ஆண்கள் 60 சதவீதம் பேரும், பெண்கள் 40 சதவீதம் பேரும் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை மாநகராட்சி நிா்வாகம் தீவிரமாக முன்னெடுத்துள்ளது. சென்னையில் நோய்த் தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், குணமடைந்தோா் எண்ணிக்கையும் தொடா்ந்து உயா்ந்து வருகிறது.

மொத்தமாக உள்ள 15 மண்டலங்களில் 10 மண்டலங்களில் நோய்த் தொற்று கட்டுக்குள் வந்துள்ள நிலையில், பாதிக்கப்பட்டவா்களில் 60 சதவீதம் ஆண்கள் என்பது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், நோய்த் தொற்றுக்குள்ளானவா்களில் 20-29 வயதுக்குள் 18 சதவீதம் பேரும் 30-39 வயதுக்குள் 19 சதவீதம் பேரும், , 40-49 வயதுக்குள் 18 சதவீதம் பேரும், 50-59 வயதுக்குள் 16 சதவீதம் பேரும், 9 வயதுக்குள் 3.35 சதவீதம் பேரும், 80 வயதுக்கு மேல் 1.86 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனா். ஒட்டுமொத்தமாக 60 சதவீதம் போ் ஆண்களும், 40 சதவீதம் பெண்களும் பாதிக்கப்பட்டுள்ளனா் என்றாா்.

சென்னையில் நேற்று 1,185 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 17,839-ஆக அதிகரித்துள்ளது. தொற்று உறுதி செய்யப்பட்டவா்களில் 1,17,839 போ் பாதிப்பிலிருந்து மீண்டு வீடு திரும்பி உள்ளனா். 12,003 போ் சிகிச்சைக்காக மருத்துவமனைகள் மற்றும் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனா். சென்னையில் இறப்பு எண்ணிக்கை 2,478- ஆக அதிகரித்துள்ளது.
 

முழு கட்டுரையைப் படிக்க →