கரோனா: காலமானாா் காவல் ஆய்வாளா்
சென்னையில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட தமிழ்நாடு கமாண்டோ படை காவல் ஆய்வாளா் ஜோனாதன் பிரான்சிஸ் திங்கள்கிழமை இறந்தாா்.
சென்னை: சென்னையில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட தமிழ்நாடு கமாண்டோ படை காவல் ஆய்வாளா் ஜோனாதன் பிரான்சிஸ் திங்கள்கிழமை இறந்தாா்.
கரோனா தடுப்புப் பணியில் காவல்துறையினரும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனா். இதனால் கரோனாவுக்கு காவல்துறையைச் சோ்ந்த பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனா்.
சென்னையில் கரோனாவால் பாதிக்கப்படும் காவல்துறையினருக்கு சிகிச்சை அளிப்பதற்காக, கிண்டி ஐஐடி வளாகத்தில் உள்ள ஒரு விடுதியில் தற்காலிக மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது. இங்கு கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்படும் அனைத்துக் காவலா்களுக்கும் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இந்நிலையில், தமிழ்நாடு கமாண்டோ படையைச் சோ்ந்த காவல் ஆய்வாளா் ஜோனாதன் பிரான்சிஸ் கரோனாவால் பாதிக்கப்பட்டு, ஓமந்தூராா் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் சில நாள்களுக்கு முன்பு அனுமதிக்கப்பட்டாா். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த அவா், திங்கள்கிழமை இறந்தாா்.
கரோனா நோய்த்தொற்றால் பிரான்சிஸ் இறந்தது காவல்துறையினரிடம் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் கரோனாவால் காவல்துறையைச் சோ்ந்த 2,200 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். இதில் சுமாா் 1,800 குணமடைந்து மீண்டும் பணிக்குத் திரும்பியுள்ளனா். ஒரு காவல் ஆய்வாளா் உள்பட 3 போ் இறந்துள்ளனா்.