முகப்பு
தமிழ்நாடு

பேரவைத் தேர்தலில் தேமுதிக தனித்துப் போட்டியிடவே நிர்வாகிகள் விருப்பம்: பிரேமலதா

தமிழக சட்டமன்றத் தேர்தலில் தேமுதிக தனித்துப் போட்டியிடவே நிர்வாகிகள் விரும்புவதாக பொருளாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார்

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:11 PM
பகிர்:


சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தலில் தேமுதிக தனித்துப் போட்டியிடவே நிர்வாகிகள் விரும்புவதாக பொருளாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா, சட்டமன்றத் தேர்தலில் தேமுதிக தனித்துப் போட்டியா? கூட்டணியா என்பதை விஜயகாந்த் அறிவிப்பார். தனித்துப் போட்டியிடவே தேமுதிக நிர்வாகிகள் விரும்புகிறார்கள். ஆனால், பேரவைத் தேர்தலில் தேமுதிக கூட்டணி குறித்து இப்போதைக்கு எதுவும் சொல்ல முடியாது. இப்போதைக்கு அதிமுக உடனான கூட்டணி நீடிக்கிறது.  

எதிர்காலக் கூட்டணி நிலை குறித்து தேமுதிகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூடி முடிவெடுக்கும். சட்டமன்ற தேர்தலில் தேமுதிகவின் நிலைப்பாட்டை டிசம்பர் அல்லது ஜனவரி மாதம் வெளியிட வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக, தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது பிறந்தநாளை குடும்பத்தினருடன் கொண்டாடினார். 

முழு கட்டுரையைப் படிக்க →