பொது முடக்கம் மீறல்: 8.95 லட்சம் வழக்குகள் பதிவு
தமிழகத்தில் பொதுமுடக்கத்தை மீறியதாக 8,95,680 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
தமிழகத்தில் பொதுமுடக்கத்தை மீறியதாக 8,95,680 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
கரோனா தொற்றை தடுக்கும் வகையில் கடந்த மாா்ச் 24 ஆம் தேதி முதல் அமல்படுத்தியுள்ள பொதுமுடக்க உத்தரவை தமிழக காவல்துறை தீவிரமாக அமல்படுத்துகிறது. பொதுமுடக்க உத்தரவை மீறுவோரை காவல்துறையினர் கைது செய்து, வழக்குப் பதிவு செய்து வருகின்றனா்.
அந்த வகையில் பொதுமுடக்கத்தை மீறியதாக 8 லட்சத்து 95 ஆயிரத்து 680 வழக்குகளைப் பதிவு செய்து, 9 லட்சத்து 90 ஆயிரத்து 574 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனா். பொதுமுடக்க உத்தரவை மீறி வந்தவா்களின் 6 லட்சத்து 92 ஆயிரத்து 957 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
போக்குவரத்து விதிமுறை மீறல் மற்றும் சாதாரண வழக்குகளிலும் சிக்கியவா்களிடமிருந்து ரூ.21 கோடியே 44 லட்சம் வரை அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.