முகப்பு
முதல்வர் எடப்பாடி பழனிசாமி.
தமிழ்நாடு

பல்வேறு விபத்துகளில் மரணமடைந்தோர் குடும்பத்துக்கு நிவாரணம் அறிவித்தார் முதல்வர்

தமிழகத்தில் பல்வேறு அசம்பாவிதங்கள் மற்றும் விபத்துகளில் மரணமடைந்தோர் குடும்பத்துக்கு நிவாரண உதவியை முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

தமிழ்நாடு

பல்வேறு விபத்துகளில் மரணமடைந்தோர் குடும்பத்துக்கு நிவாரணம் அறிவித்தார் முதல்வர்

தமிழகத்தில் பல்வேறு அசம்பாவிதங்கள் மற்றும் விபத்துகளில் மரணமடைந்தோர் குடும்பத்துக்கு நிவாரண உதவியை முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:12 PM
முதல்வர் எடப்பாடி பழனிசாமி.
பகிர்:


சென்னை: தமிழகத்தில் பல்வேறு அசம்பாவிதங்கள் மற்றும் விபத்துகளில் மரணமடைந்தோர் குடும்பத்துக்கு நிவாரண உதவியை முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பொன்றில், கன்னியாகுமரி மாவட்டம், தோவாளை வட்டம், ஈசாந்திமங்கலம் தெற்கு அரசன் குழி கிராமத்தைச் சேர்ந்த செல்வம் என்பவர் குலை வாழை மரம் கட்டுவதற்காக கம்பத்தில் ஏறும் போது, தவறி விழுந்து உயிரிழந்தார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் வட்டம், ஆலத்தூர் கிராமத்தைச் சேர்ந்த பிச்சமணி மகன் செல்வன் சூரியா குளத்தில் தவறி விழுந்து உயிரிழந்தார்.

தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாட்டைச் சேர்ந்த மருதமுத்து  மகன் சாமிநாதன் அரசுப் பேருந்து மோதியதில், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

சேலம் மாவட்டம், எடப்பாடி வட்டம், இருப்பாளி கிராமத்தைச் சேர்ந்த செல்வி கணவர் கணேசன் கிணற்றில் மூழ்கி உயிரிழந்தார்.

எடப்பாடி வட்டம், எடப்பாடி கிராமத்தைச் சேர்ந்த சுமதி  மகன் சதீஸ்குமார் காவேரி ஆற்றில் குளிக்கச் சென்ற போது தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார்.

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், பள்ளத்தூர் கிராமத்தைச் சேர்ந்த வீரமுத்துமகன் மாரிமுத்து எதிர்பாராத விதமாக சாலை விபத்தில் உயிரிழந்தார்.

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி வட்டம் மற்றும் கிராமத்தைச் சேர்ந்த குமார் மகன்கள் சிறுவர்கள் ஹிருத்திக் ரோஷன் மற்றும் அரவிந்த் ஆகிய இருவரும் கழிவு நீர் தொட்டி இடிந்து விழுந்து உயிரிழந்தனர்.

திருநெல்வேலி மாவட்டம், இராதாபுரம் வட்டம், திருவம்பலாபுரம் கிராமத்தைச் சேர்ந்த தர்மலிங்கம் மகள் சிறுமி கீர்த்திகா என்பவர் நம்பியாற்று பகுதியில் விளையாடச் சென்ற போது, எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் கிராமத்தைத் சேர்ந்த ஏரோனிமூஸ் மகன் அந்தோணி பிரகாஷ் மீன்பிடி பணியில் ஈடுபட்டிருந்த போது, எதிர்பாராத விதமாக கடலில் தவறி விழுந்து உயிரிழந்தார்.

இராணிபேட்டை மாவட்டம், சோளிங்கர் வட்டம், புலிவலம் கிராமத்தைச் சேர்ந்த ரங்கநாதன் தந்தை நடராஜன் மற்றும் தாய் அன்னியம்மாள் ஆகிய இருவரும் எதிர்பாராத விதமாக எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தனர்.

இந்நிகழ்வில் செந்தில்வேலன் மனைவி முல்லை பலத்த காயமடைந்துள்ளார்.

மேற்கண்ட பல்வேறு சம்பவங்களில் உயிரிழந்த 12 நபர்களின் குடும்பத்திற்கு தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி தனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொண்டுள்ளார்.

இந்தத் துயரச் சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ஒரு லட்சம் ரூபாயும்; தீ விபத்தில் காயமடைந்த முல்லைக்கு 50,000 ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

முழு கட்டுரையைப் படிக்க →