முகப்பு
திருமூர்த்தி அணையிலிருந்து ஆக. 28 முதல் நீர் திறக்க முதல்வர் உத்தரவு
தமிழ்நாடு

திருமூர்த்தி அணையிலிருந்து ஆக. 28 முதல் நீர் திறக்க முதல்வர் உத்தரவு

திருமூர்த்தி அணையிலிருந்து ஆகஸ்ட் 28 முதல் பாசனத்துக்கு தண்ணீர் திறக்க தமிழக முதல்வர் பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தமிழ்நாடு

திருமூர்த்தி அணையிலிருந்து ஆக. 28 முதல் நீர் திறக்க முதல்வர் உத்தரவு

திருமூர்த்தி அணையிலிருந்து ஆகஸ்ட் 28 முதல் பாசனத்துக்கு தண்ணீர் திறக்க தமிழக முதல்வர் பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:12 PM
திருமூர்த்தி அணையிலிருந்து ஆக. 28 முதல் நீர் திறக்க முதல்வர் உத்தரவு
பகிர்:

திருமூர்த்தி அணையிலிருந்து ஆகஸ்ட் 28 முதல் பாசனத்துக்கு தண்ணீர் திறக்க தமிழக முதல்வர் பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில், திருப்பூர் மாவட்டம், திருமூர்த்தி அணையிலிருந்து பாலாறு படுகை இரண்டாம் மண்டல பாசனப் பகுதிகளுக்கு தண்ணீர் திறந்து விடக் கோரி பரம்பிக்குளம் ஆழியாறு திட்ட பாலாறு படுகை வேளாண் பெருங்குடி மக்களிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன. வேளாண் பெருங்குடி மக்களின் கோரிக்கையினை ஏற்று, திருப்பூர் மாவட்டம், திருமூர்த்தி அணையிலிருந்து பரம்பிக்குளம் ஆழியாறு திட்டத்தில் பாலாறு படுகை இரண்டாம் மண்டல பாசனப் பகுதிகளுக்கு 28.8.2020 முதல் மொத்தம் 8700 மி. கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்துவிட முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இதனால் கோயம்புத்தூர் மாவட்டத்தில் பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, சூலூர் வட்டங்கள் மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் உடுமலை, மடத்துக்குளம், பல்லடம், திருப்பூர், காங்கேயம், தாராபுரம் வட்டங்களில் உள்ள 94,201 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.

மேலும், விவசாயப் பெருமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற வேண்டுமாய் முதல்வர் பழனிசாமி கேட்டுக் கொண்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
முழு கட்டுரையைப் படிக்க →