சென்னையில் 13,517 பேர் கரோனாவுக்கு சிகிச்சை
சென்னையில் வியாழக்கிழமை காலை நிலவரப்படி 13,517 பேர் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுவரை கரோனா பாதித்து 2,638 பேர் பலியாகியுள்ளனர்.
சென்னை: சென்னையில் வியாழக்கிழமை காலை நிலவரப்படி 13,517 பேர் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுவரை கரோனா பாதித்து 2,638 பேர் பலியாகியுள்ளனர்.
சென்னையில் கடந்த ஒரு மாதமாக கரோனா பாதிப்பு தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அதே வேளையில் மறுபக்கம் கரோனா பாதித்து குணமடைவோர் விகிதம் அதிகமாக இருப்பதால், கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை குறையவும் இல்லை, கூடவும் இல்லாமல் ஒரே சீராக இருந்து வருகிறது.
இதுவரை சென்னையில் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்கள் 1,29,247 பேர் ஆவர். இவர்களில் 1,13,092 பேர் குணமடைந்துள்ளனர். சென்னையிலேயே அதிகபட்சமாக கோடம்பாக்கத்தில் 1579 பேரும், அண்ணாநகரில் 1533 பேரும் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதையடுத்து அடையாறில் 1277 பேரும், அம்பத்தூரில் 1267 பேரும் சிகிச்சையில் உள்ளனர்.
சென்னையில் கரோனா பாதித்தவர்களில் 60 சதவீதம் பேர் ஆண்கள், 40 சதவீதம் பேர் பெண்கள் ஆவர்.