தமிழ்நாடு

அருந்ததியினர் சமுதாயத்திற்கு 3% உள்ஒதுக்கீடு: உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு துணை முதல்வர் வரவேற்பு 

DIN

அருந்ததியினர் சமுதாயத்திற்கு 3% உள்ஒதுக்கீடு தரும் அதிகாரம் மாநில அரசுக்கு உண்டு என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பினை வரவேற்பதாக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். 

பட்டியலினப் பிரிவில் உள்ள அருந்ததியினருக்கான உள் இட ஒதுக்கீட்டை வழங்கும் அதிகாரம் மாநில அரசுகளுக்கு இருப்பதாக உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் அருந்ததியினருக்கு 3%  உள் இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் இவ்வாறு தீர்ப்பளித்துள்ளது. 

இதுகுறித்து துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது டிவிட்டரில், பட்டியலினத்தவருக்கான இட ஒதுக்கீட்டில் அருந்ததியினருக்கு உள்ஒதுக்கீடு வழங்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் உண்டு என உச்சநீதிமன்றம்  அறிவித்துள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. அடித்தட்டு மக்களின் வாழ்வில் வளம்சேர்க்க வழிவகுத்துள்ள உச்ச நீதிமன்றத்தின் இத்தீர்ப்பினை மனதார வரவேற்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொழிலாளி உயிரிழந்த சம்பவத்தில் பொறியாளா், மேஸ்திரி மீது வழக்குப் பதிவு

இன்று நல்ல நாள்!

நீட் தோ்வு: ஈரோட்டில் 4,597 மாணவா்கள் எழுதினா்

அதிர்ஷ்டம் தரும் நாள் இன்று!

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

SCROLL FOR NEXT