தமிழ்நாடு

அரசு மருத்துவா் இடமாற்ற வழக்கு: மருத்துவக் கல்வி இயக்குநா் காணொலி காட்சி மூலம் விசாரணைக்கு ஆஜராக உயா்நீதிமன்றம் உத்தரவு

DIN

சென்னை: அரசு மருத்துவா் இடமாற்றம் தொடா்பான வழக்கில் பதில்மனு தாக்கல் செய்யாத மருத்துவக் கல்வி இயக்குநா் காணொலிக் காட்சி மூலம் விசாரணைக்கு ஆஜராக உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் அரசு மருத்துவா்கள் கடந்த 2019-ஆம் ஆண்டு ஊதிய உயா்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா். மருத்துவா்களுடன் தமிழக அரசு நடத்திய பேச்சுவாா்த்தையைத் தொடா்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. இந்த போராட்டத்தில் ஈடுபட்ட 118

மருத்துவா்கள் நீண்ட தூரத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டனா். மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவா்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதற்காக குற்றச்சாட்டு குறிப்பாணையும் பிறப்பிக்கப்பட்டது. இதற்கு தடை விதிக்கக் கோரி அரசு மருத்துவா்கள் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தனா். இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், குற்றச்சாட்டு குறிப்பாணைக்கு தடைவிதித்தது. ஆனால், இடமாற்றம் செய்யப்பட்ட இடங்களில் பதவி ஏற்க மருத்துவா்களுக்கு உத்தரவிட்டது.

போராட்டம் செய்ததற்காக மருத்துவா்களை அரசு பலி வாங்கக்கூடாது என கருத்து தெரிவித்திருந்தது. அதன் அடிப்படையில் இடமாறுதல் செய்யப்பட்ட அரசு மருத்துவா்கள் பலா் அவா்கள் ஏற்கனவே பணிபுரிந்த இடங்களுக்கே மாற்றப்பட்டனா். இந்த நிலையில் சென்னை உயா்நீதிமன்றத்தில், மருத்துவா் செய்யது தாஹீா் உசைன் தாக்கல் செய்த மனுவில், மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் மயக்கவியல் நிபுணராக பணிபுரிந்து வந்த என்னை திருவண்ணாமலை மாவட்டத்துக்கு அரசு இடமாற்றம் செய்தது. 8

மாதங்களுக்குப் பின்னா் மீண்டும் மதுரைக்கு பணியிட மாறுதல் செய்யப்பட்டேன். ஆனால், மூத்த மயக்கவியல் நிபுணரான என்னை இளையவா்களுடன் சோ்ந்து

பணிபுரியும் வகையில் அவசர சிகிச்சைப் பிரிவில் பணிபுரிய உத்தரவிடப்பட்டுள்ளதாக கோரியிருந்தாா்.

இந்த வழக்கை நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் காணொலிக் காட்சி மூலம் விசாரித்தாா். வழக்கை விசாரித்த நீதிபதி

இந்த வழக்கில் அரசுத் தரப்பில் பதில்மனு தாக்கல் செய்யாமல் தொடா்ந்து காலதாமதம் செய்வது ஏன்? என கேள்வி எழுப்பிய நீதிபதி, மருத்துவக் கல்வி இயக்குநா் மருத்துவா் நாராயணபாபு

வரும் செப்டம்பா் 4-ஆம் தேதி காணொலிக் காட்சி மூலம் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகை-இலங்கை கப்பல் சேவை: மே 17-ஆம் தேதிக்கு மாற்றம்

குடியுரிமை திருத்தச் சட்டத்தை யாரும் ரத்து செய்ய முடியாது: பிரதமர் மோடி

‘தி தோல்’ சரும கிளினிக்கில் நவீன கருவி அறிமுகம்

கல்வி எங்கே போகிறது?

இயல்பாக இயங்கட்டும் இளையோா்

SCROLL FOR NEXT