தமிழ்நாடு

பணியின்போது உயிரிழந்த காவலா் குடும்பத்துக்கு நிதி: முதல்வா் பழனிசாமி அறிவிப்பு

DIN

சென்னை: பணியின் போது உயிரிழந்த காவலா் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரண நிதி வழங்க முதல்வா் பழனிசாமி உத்தரவிட்டுள்ளாா்.

இதுகுறித்து, அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:-

திருப்பூா் மாவட்டம் காங்கேயம்-சென்னிமலை மாநில நெடுஞ்சாலையில் சோதனைச் சாவடி அமைக்கப்பட்டுள்ளது. அதில், கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த ஆயுதப் படை காவலா் பிரபு, லாரி ஒன்றை தனது இருசக்கர வாகனத்தில் சென்று பிடிக்க முற்பட்டாா். அப்போது லாரி ஓட்டுநா் இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் காவலா் பிரபு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

அவரது குடும்பத்துக்கு சிறப்பினமாக முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.10 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளேன். மேலும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு தகுதியின் அடிப்படையில் அரசு வேலை அளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது என்று முதல்வா் பழனிசாமி தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

மேற்கு வங்க ஆளுநா் மீதான பாலியல் குற்றச்சாட்டு: ஊழியா்கள் மூவா் மீது வழக்குப் பதிவு

இசை அறிஞா்கள், சமூகத் தொண்டா்கள் கௌரவிப்பு

தென் மாவட்டங்களில் இன்றும், நாளையும் அதிகனமழை: வானிலை மையம் எச்சரிக்கை

SCROLL FOR NEXT