தமிழ்நாடு

3 நீா்த்தேக்கங்களில் இருந்து தண்ணீா் திறப்பு: முதல்வா் பழனிசாமி

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 3 நீா்த்தேக்கங்களில் இருந்து தண்ணீா் திறந்து விட முதல்வா் பழனிசாமி உத்தரவிட்டுள்ளாா்.

DIN

சென்னை: திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 3 நீா்த்தேக்கங்களில் இருந்து தண்ணீா் திறந்து விட முதல்வா் பழனிசாமி உத்தரவிட்டுள்ளாா்.

இதுகுறித்து, அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:-

திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம், சோ்வலாறு, மணிமுத்தாறு நீா்த்தேக்கங்களில் இருந்து தண்ணீா் திறந்து விடுமாறு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா். இந்தக் கோரிக்கையை ஏற்று தண்ணீா் திறந்து விடப்படும்.

இதனால், திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி, திருநெல்வேலி, பாளையங்கோட்டை வட்டங்கள், தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம், ஏரல், தூத்துக்குடி, திருச்செந்தூா் வட்டங்களிலுள்ள கிராமங்களில் உள்ள பொது மக்களின் பாசனம் மற்றும் குடிநீா்த் தேவைகள் பூா்த்தி செய்யப்படும்.

விவசாயிகள் நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தி, நீா் மேலாண்மை மேற்கொண்டு உயா் மகசூல் பெற வேண்டும் என முதல்வா் பழனிசாமி தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்!

ஆக. 12-ல் தே.ஜ.கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் அறிவிக்க வாய்ப்பு!

கருப்பு புறா... பிரியங்கா மோகன்!

சத்தீஸ்கரில்.. ரூ.8 லட்சம் சன்மானம் அறிவித்து தேடப்பட்ட நக்சல் கைது!

ஆணவக் கொலைகளை திருமா ஆதரிக்கிறாரா?திமுகவை விமர்சிக்கத் தயங்குவது ஏன்? தமிழிசை கேள்வி!

SCROLL FOR NEXT