தமிழ்நாடு

சசிகலாவின் ரூ. 300 கோடி மதிப்புள்ள சொத்துகள் முடக்கம்

DIN


சசிகலாவுக்கு சொந்தமான மேலும் ரூ. 300 கோடி மதிப்புள்ள சொத்துகளை வருமான வரித் துறை முடக்கியுள்ளதாகத் தகவல்கள் கிடைத்துள்ளன.

சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட சசிகலா பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தண்டனை காலம் முடிவடைந்து அவர் அடுத்தாண்டு வெளிவரவுள்ளார்.

இந்த நிலையில் சசிகலாவுக்கு சொந்தமான ரூ. 300 கோடி மதிப்புள்ள சொத்துகளை வருவமான வரித் துறை முடக்கியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பினாமி தடுப்புச் சட்டத்தின்கீழ் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

முன்னதாக, கடந்த 2017-இல் சசிகலாவின் உறவினர்கள், ஆதரவாளர்கள் வீடுகள், அலுவலகங்கள் என சுமார் 187 இடங்களில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தினர். இந்த சோதனையின் முடிவில் சுமார் ரூ. 1,500 கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்கள், ரூ. 5.5 கோடி ரொக்கம், 15 கிலோ தங்கம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டதாகத் தகவல் வெளியானது.

இதையடுத்து, விசாரணையின் முடிவில் சசிகலா பினாமிகளின் ரூ. 1,500 கோடி மதிப்புள்ள சொத்துகளை வருமான வரித் துறை முடக்கியது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

SCROLL FOR NEXT