கும்மிடிப்பூண்டியில் கன மழை: இருவேறு சம்பவங்களில் வேலைக்கு பெண்கள் சென்ற வேன் கவிழ்ந்து 21 பேர் காயம்
கும்மிடிப்பூண்டி அடுத்த மாநெல்லூர் அருகேயும், கும்மிடிப்பூண்டி கன்னியம்மன் கோவில் மேம்பாலம் அருகேயும் வேலைக்கு பெண்கள் சென்றுக் கொண்டிருந்த இரு வேன்கள் கவிழ்ந்து 2 வேன் ஓட்டுநர்கள் உள்ளிட்ட 21 பேர் காயம் அடைந்தனர்.
தமிழ்நாடுகும்மிடிப்பூண்டியில் கன மழை: இருவேறு சம்பவங்களில் வேலைக்கு பெண்கள் சென்ற வேன் கவிழ்ந்து 21 பேர் காயம்
கும்மிடிப்பூண்டி அடுத்த மாநெல்லூர் அருகேயும், கும்மிடிப்பூண்டி கன்னியம்மன் கோவில் மேம்பாலம் அருகேயும் வேலைக்கு பெண்கள் சென்றுக் கொண்டிருந்த இரு வேன்கள் கவிழ்ந்து 2 வேன் ஓட்டுநர்கள் உள்ளிட்ட 21 பேர் காயம் அடைந்தனர்.
கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த மாநெல்லூர் அருகேயும், கும்மிடிப்பூண்டி கன்னியம்மன் கோவில் மேம்பாலம் அருகேயும் வேலைக்கு பெண்கள் சென்றுக் கொண்டிருந்த இரு வேன்கள் கவிழ்ந்து 2 வேன் ஓட்டுநர்கள் உள்ளிட்ட 21 பேர் காயம் அடைந்தனர்.
கும்மிடிப்பூண்டி அடுத்த கண்ணம்பாக்கம் மற்றும் மாநெல்லூரைச் சேர்ந்த பெண்கள் கும்மிடிப்பூண்டி சிப்காட்டில் உள்ள ஷூ தொழிற்சாலைக்கு வேலைக்கு வழக்கம் போல வேனில் சென்றுக் கொண்டிருந்தனர்.
வேனை ஓட்டுநர் வினோத்(27) ஓட்டினார். வேனில் மாநெல்லூரைச் சேர்ந்த சுதா(30), பாரதி(39), தனம்(37), ஆர்.எஸ்.பாரதி(36), சௌம்யா(32), மோகனா(36), ஜீவிதா(32), ஜெயா(30), கௌசல்யா(31), புனிதா(30), ஹேமலதா(32) ஆகிய 11 பெண்கள் இருந்தனர். இதில் 9 பேர் மாநெல்லூரைச் சேர்ந்தவர்கள், 2 பேர் கண்ணம்பாக்கத்தை சேர்ந்தவர்கள்.
இந்நிலையில், இந்த வேண் மாநெல்லூரை தாண்டி சென்றுகொண்டிருந்த போது ஒரு திருப்பத்தில் மாடுகள் குறுக்கே வந்த நிலையில் ஓட்டுநர் வினோத் பிரேக் போட்டர். அப்போது மழை காரணமாக வேன் தலைகுப்புற கவிழ்ந்தது.
சம்பவம் குறித்து தகவல் அறிந்து மாநெல்லூர் ஊராட்சி தலைவர் லாரன்ஸ் மற்றும் திமுக ஒன்றிய கவுன்சிலர் சிட்டிபாபு விபத்தில் சிக்கிய ஓட்டுநர் உள்ளிட்ட 12 பேரை மீட்டு கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சேர்த்தனர்.
இந்நிலையில், கும்மிடிப்பூண்டி ரெட்டம்பேடு மற்றும் வழுதலம்பேட்டில் இருந்து 8 பெண்களை அம்பத்தூரில் உள்ள தொழிற்சாலைக்கு வேலைக்கு வேனில் அழைத்து சென்ற வேன் கும்மிடிப்பூண்டி கன்னியம்மன் கோவில் மேம்பாலம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது மழை காரணமாக நிலை தடுமாறி சாலை தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது. இதில், வேன் ஓட்டுநர் டிரைவர் அஜீத்(25) மற்றும் வேனில் இருந்த லட்சுமி(18), மோனிஷா(19), அமுதா(21),சுப்புலட்சுமி(20), லாவண்யா(20), அனிதா(18),சுதா(18),மோகனசுந்தரி(19) ஆகியோர் காயமடைந்தனர்.
தொடர்ந்து அங்கிருந்தோர் விபத்தில் சிக்கிய 8 பெண்கள் உள்ளிட்ட 9 பேரை மீட்டு கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சேர்த்தனர்.
இந்நிலையில், இரு விபத்து சம்பவங்களிலும் காயமடைந்து சிகிச்சைக்கு சேர்க்கப்பட்ட 21 பேரை கும்மிடிப்பூண்டி ஒன்றிய குழு தலைவர் கே.எம்.எஸ்.சிவகுமார், வட்டார வளர்ச்சி அலுவலர் வாசுதேவன், டிஎஸ்பி ரமேஷ் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி அவர்களுக்கு தேவையான சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தனர்.
இந்த இரு விபத்துகளில் 19 பெண்களில் 6 பேருக்கு பலத்த காயம் என்பதால் அவர்கள் மேல் சிகிச்சைக்கு அனுப்பப்பட உள்ளனர்.