தமிழ்நாடு

சீர்காழி நகர்ப் பகுதிகள் தண்ணீரில் மூழ்கிய நகர்ப் பகுதிகள் 

DIN

சீர்காழி பகுதியில் தொடர்ந்து இடைவிடாது 3 நாள்களாக பெய்து வரு கனமழையால் நகரில் மழைநீர் சூழ்ந்துள்ளதால் குடியிருப்புவாசிகள் வீட்டை விட்டு வெளியே சென்று வர மிகவும் சிரமப்பட்டு வீட்டிலேயே முடங்கிக் கிடக்கும் நிலை உள்ளது.

சீர்காழி பகுதியில் தொடர்ந்து இடைவிடாது 3 நாள்களாக கனமழை பெய்து வருகிறது. நாகை மாவட்டத்தில் அதிக மழைப்பொழிவாக வெள்ளிக்கிழமை காலை 8.30 மணி நிலவரப்படி, 20 மி.மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதனால் சீர்காழி நகரிலுள்ள பாலசுப்பிரமணியன் நக,ர் அடையார் நகர், எஸ் கே ஆர் நகர், பாப்பையா நகர், தி நகர் சின்னத்தம்பி நகர், கற்பகம் நகர், கோவிந்தராஜன் நகர் உள்ளிட்ட பல்வேறு நகர் பகுதியில் உள்ள உறுப்புகளை மழைநீர் 4 அடிக்கு மேல் சூழ்ந்துள்ளது.

இதனால் குடியிருப்புவாசிகள் வீட்டை விட்டு வெளியே சென்று வர மிகவும் சிரமப்பட்டு வீட்டிலேயே முடங்கிக் கிடக்கும் நிலை உள்ளது.

தேங்கியுள்ள மழை நீரை விரைந்து அகற்ற நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க குடியிருப்புவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரே பரேலியில் காங்கிரஸ் தொண்டர்களைச் சந்திக்கிறார் பிரியங்கா

ஏற்காட்டுக்கு சென்ற நடிகர்கள் பட்டாளம்: காரணம் என்ன?

துணைவேந்தர்கள் நியமனம்.. ராகுல் காந்தி கருத்துக்கு கல்வியாளர்கள் எதிர்ப்பு!

தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்க சிறப்பு ஏற்பாடு

பகல் கனவு காணும் பாஜக: நவீன் பட்நாயக் பதிலடி

SCROLL FOR NEXT