உசிலம்பட்டி : உசிலம்பட்டியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 4 ஆம் ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.
ஜெயலலிதா நான்காம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு உசிலம்பட்டி திருமுருகன் கோவில் முன்பாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் ஜெயலலிதா படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
உசிலம்பட்டி அம்மா மக்கள் முன்னேற்ற கழக நகர அம்மா பேரவை செயலாளர் உக்கிரபாண்டி தலைமையில் முன்னாள் எம்.எல்.ஏ ஏ.கே.டி ராஜா முன்னிலையில், பொதுக்குழு உறுப்பினர் சுப்புராஜ் ,மாவட்ட வழக்குரைஞர் பிரிவுச் செயலாளர் வீரபிரபாகரன் ,வழக்குரைஞர்கள் பாலச்சந்தர், காக்கிராஜா ஒன்றிய தொழிற்சங்கம் மார்க்கெட் பிச்சை சாமி குணா, கணேசன், சூப்பர் பாண்டி, புதூர் பெரியகருப்பன் சிவகுமார், நகர நிர்வாகிகள் கண்ணன், வீரமணி ஒச்சு,ராமகிருஷ்ணன் ,மோகன் குமார், ஆட்டோ ராம்குமார் ,மகளிரணி அரிசி மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.