ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நான்காம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
கமுதி அதிமுக ஒன்றிய செயலாளர் எஸ் பி காளிமுத்து தலைமையில் அவைத்தலைவரும், பம்மனேந்தல் ஊராட்சிமன்றத் துணைத் தலைவருமான சேகரன், மாவட்ட மின்வாரிய அண்ணா தொழிற்சங்க செயலாளர் ராஜேந்திரன் ஆகியோரது முன்னிலையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இதில் எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் வி.கர்ணன், கூட்டுறவு சங்கத் தலைவர்கள் டி நாகராஜ் (புத்துருத்தி), கருமலையான் (திம்மநாதபுரம்)K.P.N கருப்புசாமி (எம்.எம் கோட்டை), A.R. ராமச்சந்திரன் (நகரத்தார் குறிச்சி), புதுக்கோட்டை ஊராட்சி மன்றத் தலைவர் க.வீரபாண்டி உட்பட ஏராளமான மான கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.