முகப்பு
தமிழ்நாடு

கும்மிடிப்பூண்டி: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒன்றியக் குழுத் தலைவர் நிவாரண உதவி

கும்மிடிப்பூண்டி ஒன்றியக்குழுத் தலைவர் கே.எம்.எஸ்.சிவகுமார் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை செய்து வருகிறார்.

Updated On : 6 டிசம்பர், 2020 at 2:57 PM
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி வழங்கிய கும்மிடிப்பூண்டி ஒன்றியக் குழுத் தலைவர்
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:33 PM

தொடர் மழையால் கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தில் பல்வேறு பகுதிகளில் மழை வெள்ளம் புகுந்து பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வரும் நிலையில் கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தில் மழையால் பாதிக்கப்பட்ட அனைத்து பகுதிகளுக்கும் கும்மிடிப்பூண்டி ஒன்றியக்குழுத் தலைவர் கே.எம்.எஸ்.சிவகுமார் அதிமுகவினருடன் சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை செய்து வருகிறார்.

நிவர் புயல் மற்றும் அதனைத் தொடர்ந்து பெய்து வந்த பலத்த மழையின் காரணமாக கும்மிடிப்பூண்டியில் பல்வேறு பகுதியில் மழை வெள்ளம் குடியிருப்புகளில் புகுந்து பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டனர். இதனால் கும்மிடிப்பூண்டியில் பல்வேறு பகுதியில் தங்கும் மையங்கள் அமைக்கப்பட்டு அங்கு பாதிக்கப்பட்ட மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

நிவர் புயலின்போது கும்மிடிப்பூண்டி ஒன்றியக்குழுத் தலைவர் கே.எம்.எஸ்.சிவகுமார் கும்மிடிப்பூண்டியில் ஒவ்வொரு பகுதிக்கும் சென்று  பாதிப்பு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தார்.

Advertisement

தொடர்ந்து கும்மிடிப்பூண்டி ஒன்றிய அதிமுகச் செயலர் கோபால் நாயுடு, பொதுக்குழு உறுப்பினர் அபிராமன்,  கண்ணம்பாக்கம் ஊராட்சி மன்றத் தலைவர் சதீஷ், முன்னாள் மாணவரணிச் செயலாளர் முல்லைவேந்தன் உள்ளிட்டோருடன் சேர்ந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை வழங்கி வைக்கிறார்.

இந்நிகழ்வில் அதிமுக தொகுதிச் செயலாளர் தியாகராயம், பாதிரிவேடு ஊராட்சி தலைவர் என்.டி.மூர்த்தி, கே பி ஆரோன், புதுகும்மிடிப்பூண்டி இ. எஸ்.இராமச்சந்திரன்,டேவிட் குமார் , சரவணன் , நேதாஜி உள்ளிட்ட அதிமுகவினர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.