முகப்பு
தமிழ்நாடு

வேதாரண்யம்: விவசாயிகளுக்கு ஆதரவாக இடதுசாரிகள் சாலை மறியல்

தில்லியில் வேளாண் சட்டத்துக்கு எதிராக போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே இடதுசாரிக்கட்சியினர் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Updated On : 6 டிசம்பர், 2020 at 2:30 PM
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே
பகிர்:

வேதாரண்யம்: தில்லியில் வேளாண் சட்டத்துக்கு எதிராக போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே இடதுசாரிக்கட்சியினர் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகட்டூர் கடை வீதியில் நடைபெற்ற சாலை மறியலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் பங்கேற்றனர்.

வேளாண் திருத்தச் சட்டங்களை திரும்பப் பெறவும், தில்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் இந்த மறியல் நடைபெற்றது.

Advertisement

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் வி.சுப்ரமணியன், அம்பிகாபதி, கோவை.சுப்ரமணியன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் த. நாராயணன், சிவகுரு. பாண்டியன், கே.மாரியப்பன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.