பெங்களூரு: ஜனவரி மாதம் புதிய அரசியல் கட்சி தொடங்கவிருக்கும் நடிகர் ரஜினி, நேற்று சென்னையில் இருந்து பெங்களூரு புறப்பட்டுச் சென்றார்.
பெங்களூருவில் உள்ள தனது அண்ணன் சத்ய நாராயணாவை சந்தித்து, தனது அரசியல் கட்சி தொடங்கும் திட்டம் குறித்து தெரிவித்த ரஜினி, அண்ணனிடம் ஆசி பெற்றார்.
முன்னதாக, ஜனவரியில் புதுக் கட்சியை தொடங்கி, சட்டப்பேரவைத் தோ்தலைச் சந்திக்கப் போவதாக நடிகா் ரஜினிகாந்த் கடந்த வாரம் வியாழக்கிழமை அறிவித்தாா். புதிய கட்சி தொடங்கவிருக்கும் தேதியை டிசம்பர் 31-ம் தேதி அறிவிப்பதாகவும் ரஜினி அறிவித்திருந்தார்.
ஜனவரியில் கட்சி துவங்க இருப்பதால், டாக்டர் ரா. அர்ஜுனமூர்த்தியை கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராகவும் தமிழருவி மணியன் மேற்பார்வையாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர் என்றும் கூறியிருந்தார்.
இந்த நிலையில், இன்று ரஜினி பெங்களூரு சென்று, அண்ணனை சந்தித்து ஆசி பெற்றுள்ளார்.
ரஜினி மக்கள் மன்ற நிா்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம், ரஜினிகாந்த் தலைமையில் நவம்பா் 30-ஆம் தேதி நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்குப் பிறகு, எனது அரசியல் வருகை குறித்த முடிவை விரைவில் அறிவிப்பேன் என்று ரஜினி கூறியிருந்தாா்.
இதையும் படிக்கலாமே.. ஜனவரியில் புதிய கட்சி தொடக்கம்: ரஜினி அறிவிப்பு
அதன்படி ரஜினி கடந்த வாரம் வியாழக்கிழமை சுட்டுரையில் வெளியிட்ட அறிவிப்பு:
ஜனவரியில் புதிய கட்சித் தொடங்கப்படும். அதற்கான அறிவிப்பு டிசம்பா் 31-இல் வெளியிடப்படும். ‘மாற்றுவோம். எல்லாவற்றையும் மாற்றுவோம்’. இப்போது இல்லையென்றால், எப்போதும் இல்லை.
வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் மக்களுடைய பேராதரவுடன் வெற்றி பெற்று தமிழகத்தில் நோ்மையான, நாணயமான, வெளிப்படையான ஊழலற்ற, ஜாதி மதச் சாா்பற்ற ஆன்மிக அரசியலை உருவாக்குவது நிச்சயம் என்று கூறியிருந்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.