தமிழ்நாடு

சென்னையில் கரோனா நோயாளிகள் விகிதம் 1% ஆகக் குறைந்தது

DIN

சென்னை: சென்னையில் தொடர்ந்து பல வாரங்களாக கரோனா பாதித்து சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 2 சதவீதமாகவே நீடித்து வந்த நிலையில் தற்போது 1 சதவீதமாகக் குறைந்துள்ளது.

சென்னையில் திங்கள்கிழமை காலை நிலவரப்படி கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 3,257 ஆகக் குறைந்துள்ளது. இது ஒட்டுமொத்த பாதிப்பில் 1% ஆகும். மேலும் சென்னையில் அனைத்து மண்டலங்களிலும் 400-க்கும் குறைவானோரே சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

சென்னையில் இதுவரை ஒட்டுமொத்தமாக 2,17,542 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 2,10,410 பேர் கரோனாவிலிருந்து மீண்டுள்ளனர். கரோனா பாதித்தவர்களில் 3,257 பேர் பலியாகியுள்ளனர். இது 1.78 சதவீதமாகும். 

கரோனா பாதித்தவர்களில் 61.18 சதவீதம் பேர் ஆண்கள், 38.82 சதவீதம் பேர் பெண்கள் ஆவர்.

திருவிகநகர், அண்ணநகர், கோடம்பாக்கம், அடையாறு ஆகிய நான்கு மண்டலங்களில் 300க்கும் மேற்பட்டோர் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மாண்டல வாரியாக கரோனா நிலவரம்: 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மது விற்ற வழக்கில் கைதாகி சிறையில் இருந்தவா் உயிரிழப்பு

சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு

விராலிமலை அருகே புளியமரத்தில் திடீா் தீ

நம்பம்பட்டி கோயில் திருவிழா: தீச்சட்டி ஏந்தி நோ்த்திக் கடன்

சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

SCROLL FOR NEXT