சேலம் எட்டு வழிச்சாலை வழக்கில் உச்ச நீதிமன்றம் நாளை தீர்ப்பு
சென்னை - சேலம் இடையேயான எட்டு வழிச்சாலை திட்டம் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்க உள்ளது.
புது தில்லி: சென்னை - சேலம் இடையேயான எட்டு வழிச்சாலை திட்டம் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்க உள்ளது.
எட்டுவழிச் சாலை திட்டத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த தடை உத்தரவை எதிர்த்து சென்னை - சேலம் சாலை திட்ட இயக்குநர் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் நாளை தீர்ப்பளிக்கப்பட உள்ளது.
சென்னை - சேலம் எட்டு வழிச்சாலைத் திட்டத்துக்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் கடந்த ஆண்டு உத்தரவிட்டது.
சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், சென்னை - சேலம் எட்டு வழிச்சாலை திட்டத்துக்காக நிலங்களை கையகப்படுத்த தமிழக அரசு பிறப்பித்த அறிவிப்பானையை 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 8-ம் தேதி ரத்து செய்தது.
மேலும், இந்த திட்டத்துக்காக பொதுமக்களிடமிருந்து கையகப்படுத்தப்பட்டுள்ள நிலங்களை எட்டு வாரத்துக்குள் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தது.
உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தேசிய நெடுஞ்சாலை துறையின் சார்பில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்க உள்ளது.