நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடர் மழை காரணமாக வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு 
தமிழ்நாடு

நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடர் மழை: வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

தேனி மாவட்டத்தில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக வைகை அணைக்கான நீர்வரத்து அதிகரித்து உள்ளது. இதனால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

DIN

தேனி மாவட்டத்தில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக வைகை அணைக்கான நீர்வரத்து அதிகரித்து உள்ளது. இதனால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

தேனி மாவட்டத்தில் கடந்த  சில நாட்களாக பரவலாக பலத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக வைகை ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான வருசநாடு மலைப்பகுதியில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக வைகை ஆற்றில் நீர்வரத்து அதிகரித்தது. மேலும் வைகைஅணையின் நீர்பிடிப்பு பகுதிகளான போடி, சின்னமனூர், உத்தமபாளையம் உள்ளிட்ட பகுதிகளிலும் பலத்த மழை பெய்ததால், வைகை அணைக்கான நீர்வரத்து கிடுகிடுவென அதிகரித்துள்ளது. 

புதன்கிழமை காலை 6 மணியளவில் வினாடிக்கு 3 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக 71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் 58.97 அடியாக உயர்ந்துள்ளது. 

தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதால் அணையின் நீர்மட்டம் சீராக உயர்ந்து வருகிறது. வைகை அணை நீர்மட்டம் உயர்ந்து வருவதால் விவசாயிகளும் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மோடியின் போர்! ரஷியா - உக்ரைன் போரில் இந்தியாவுக்கு தொடர்பு! - டிரம்ப் ஆலோசகர்

அமெரிக்க பள்ளியில் துப்பாக்கிச் சூடு! 2 குழந்தைகள் பலி; 17 பேர் படுகாயம்!

தினம் தினம் திருநாளே!

திருவள்ளூரில் போதை மாத்திரைகள் விற்றதாக 5 போ் கைது

பெரம்பலூா் மாவட்டத்தில் விநாயகா் சதுா்த்தி விழா!

SCROLL FOR NEXT