முகப்பு
தமிழ்நாடு

தம்மம்பட்டி பகுதியில் மாடுகளுக்கு பரவும் அம்மை!

தம்மம்பட்டி பகுதியில் மாடுகளுக்கு பரவி வரும் அம்மை பாதிப்பினால், விவசாயிகள் பெரிதும் அச்சம் அடைந்துள்ளனர். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:05 PM
அம்மை பாதிக்கப்பட்டுள்ள பசு
பகிர்:

தம்மம்பட்டி: தம்மம்பட்டி பகுதியில் மாடுகளுக்கு பரவி வரும் அம்மை பாதிப்பினால், விவசாயிகள் பெரிதும் அச்சம் அடைந்துள்ளனர். 

தம்மம்பட்டி, செந்தாரப்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதியில் மாடுகளுக்கு அம்மை நோய் வேகமாக பரவி  வருகிறது. பெரியம்மை எனப்படும் இந்த தொற்றுக்கு ஏராளமான கறவை மாடுகள் பாதிக்கப்பட்டு உள்ளன. 
குறிப்பாக, அம்மை பாதிப்புக்கு உள்ளாகும் மாடுகளின் உடலில் சிறிய கொப்புளங்கள் ஏற்படுகிறது. அதன் பிறகு  பெரிய குழிப் புண்ணாக  மாறி, மாடுகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதன் காரணமாக மாடுகள் உயிரிழந்து வருகிறது, என்பதால் விவசாயிகள், பெரிதும் அச்சம் அடைந்துள்ளனர்.

ஈ, கொசுக்கள் மூலமாக அம்மை பரவுவதால் இதனை கட்டுப்படுத்துவது பெரிய சவாலாக மாறி உள்ளது. எனவே  தம்மம்பட்டி பகுதியில், மாடுகளுக்கு அம்மை நோய் பரவுவதை  தடுக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை  எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.