பொங்கல் திருநாள்: பேருந்துகளுக்கான முன்பதிவு இன்று தொடக்கம்
ஜனவரி மாதம் பொங்கல் திருநாளை முன்னிட்டு, சொந்த ஊர்களுக்குச் செல்லும் பொதுமக்களின் வசதிக்காக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் பேருந்துகளில் பயணிக்க டிக்கெட் முன்பதிவு வசதி இன்று முதல்தொடங்குகிறது
ஜனவரி மாதம் பொங்கல் திருநாளை முன்னிட்டு, சொந்த ஊர்களுக்குச் செல்லும் பொதுமக்களின் வசதிக்காக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் பேருந்துகளில் பயணிக்க டிக்கெட் முன்பதிவு வசதி இன்று முதல் தொடங்குகிறது.
இது குறித்து வெளியிடப்பட்டிருக்கும் செய்திக் குறிப்பில்,
எதிர்வரும் பொங்கல் திருநாளை முன்னிட்டு, பொதுமக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொள்ள ஏதுவாக, தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் பயணம் செய்வதற்கான வசதி தமிழகம் முழுவதும் இன்று முதல் (11.12.2020) தொடங்குகிறது.
பொது மக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். முன்பதிவு செய்யப்படும் வலைத்தளங்களின் விவரம் இத்துடன் இணைக்கப் பட்டுள்ளது.
பொதுமக்கள் முன்பதிவு செய்துகொள்ள நடைமுறையிலுள்ள இணையதள வசதியான www.tnstc.in, tnstc official app, ஆகியவற்றில் இந்த வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
மேற்கண்ட இத்தகவலை அரசு விரைவுப் போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் கே. இளங்கோவன் தெரிவித்துள்ளார்.