முகப்பு
தமிழ்நாடு

சக்திதாசன் மறைவுக்கு முதல்வர் இரங்கல்

இந்திய குடியரசு கட்சி (கவாய் பிரிவு) முன்னாள் மாநிலத் தலைவர் சக்திதாசன் மறைவுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

Updated On : 11 டிசம்பர், 2020 at 2:33 PM
இந்திய குடியரசு கட்சி முன்னாள் மாநிலத் தலைவர் சக்திதாசன் மறைவு: முதல்வர் இரங்கல்
பகிர்:

இந்திய குடியரசு கட்சி (கவாய் பிரிவு) முன்னாள் மாநிலத் தலைவர் சக்திதாசன் மறைவுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

முதல்வர் வெளியிட்டிருக்கும் இரங்கல் செய்தியில், இந்திய குடியரசு கட்சியின்(கவாய் பிரிவு) முன்னாள் மாநிலத் தலைவர் சக்திதாசன் உடல் நலக்குறைவு காரணமாக நேற்று  காலமானார் என்ற செய்தியை அறிந்து நான் வேதனை அடைந்தேன்.

சக்திதாசன் இளம் வயதில் சமூக பணியாற்ற ஆர்வம் கொண்டு, பொது வாழ்க்கையில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டவர்.

Advertisement

ஏழ்மை நிலையில் உள்ள மக்களின் முன்னேற்றத்திற்கு பாடுபட்டவர். ஷெட்யூல்டு இன மக்கள் விடுதலை என்ற ஒரு இயக்கத்தினை துவங்கி மக்கள் பணியாற்றியவர். முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். அ.தி.மு.க.வை தோற்றுவித்து, சட்டமன்ற மேலவைத் தேர்தலில் அதிமுகவின் முதல் வேட்பாளராக நிறுத்தி பெருமைப்படுத்திய புகழுக்குரியவர் சக்திதாசன்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சக்திதாசன் அவர்களை கௌரவிக்கும் வண்ணம், 2004-ம் ஆண்டு அவருக்கு அம்பேத்கர் விருது வழங்கி பாராட்டியது குறிப்பிடத்தக்கது.

சக்திதாசன் மறைவு அவர்தம் குடும்பத்தினருக்கு மட்டுமல்லாமல், அவரது கட்சியினருக்கும், பேரிழப்பாகும். அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.