தமிழ்நாடு

கோயம்பேடு சந்தையில் காய்கறிகளின் விலை குறைந்தது

DIN


சென்னை: நிவர் மற்றும் புரெவி புயல் மற்றும் மழை காரணமாக கடந்த சில வாரங்களாக உச்சத்தைத் தொட்ட காய்கறிகளின் விலை தற்போது குறைந்துள்ளது.

சென்னை கோயம்பேடு சந்தையில் கடந்த சில வாரங்களாக காய்கறிகளின் வரத்துக் குறைந்து, விலை பல மடங்கு அதிகரித்திருந்தது.

மொத்த விற்பனையில் விலை இரண்டு அல்லது மூன்று மடங்கு உயர்ந்தால், சில்லறை விற்பனையில் அது மிகப்பெரிதாக எதிரொலிப்பது வழக்கம்.

தற்போது புயல், மழை பாதிப்புகள் நீங்கி, வழக்கம் போல கோயம்பேடு சந்தைக்கு காய்கறிகள் வரத்து அதிகரித்திருப்பதால், விலை கணிசமாகக் குறைந்துள்ளது.

இன்றைய காய்கறி விலை நிலவரம் (கிலோ)
கத்திரிக்காய் - ரூ.35
கேரட் - ரூ.55
பீட்ரூட் - ரூ.35
பீன்ஸ் - ரூ.45
தக்காளி - ரூ.25
பச்சை மிளகாய் - ரூ.30
வெங்காயம் - ரூ.40
சின்ன வெங்காயம் - ரூ.100
உருளைக்கிழங்கு - ரூ.40
முருங்கைக்காய் - ரூ.40
அவரைக்காய் - ரூ.55 என்ற அளவில் விற்பனை செய்யப்படுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜெயலலிதா அம்மாதான் எனக்கு உத்வேகம்: ஸ்ரேயா ரெட்டி நெகிழ்ச்சி!

யெச்சூரி உரையில் ’முஸ்லிம்', 'வகுப்புவாதம்’ சொற்களை நீக்கச் சொன்ன வானொலி, தொலைக்காட்சி!

இந்த வார பலன்கள்: 12 ராசிக்கும்!

6-ம் கட்ட மக்களவைத் தேர்தல்: 180 வேட்பாளர்கள் மீது குற்ற வழக்கு!

கொடைக்கானலில் 61 வது மலர் கண்காட்சி,கோடை விழா தொடங்கியது

SCROLL FOR NEXT