முகப்பு
தமிழ்நாடு

மாமல்லபுரத்தில் நாளை முதல் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி

மெரீனா, மாமல்லபுரம் ஆகிய பகுதிகளுக்கு நாளை (திங்கள்கிழமை) முதல் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:06 PM
மாமல்லபுரத்தில் நாளை முதல் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி
பகிர்:

சர்வதேச சுற்றுலாத் தலமான மாமல்லபுரத்தில் உள்ள பாரம்பரிய சின்னங்களை பார்வையிட நாளை (திங்கள் கிழமை) முதல் அனுமதிக்கப்படுவதாக மாமல்லபுரம் தொழில்துறை தெரிவித்துள்ளது.

கரோனா தொற்றை தடுக்கும் வகையில் கடந்த 8 மாதங்களாக மாமல்லபுரத்தில் சுற்றுலா இடங்களைப் பார்வையிட சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில், தொல்லியல் துறை திங்கள்கிழமை முதல் சுற்றுலா இடங்கள் திறக்கப்பட்டு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளித்துள்ளது.
இதையடுத்து மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி என மாமல்லபுரம் தொல்லியல் துறை ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது. 

இதுகுறித்து மாமல்லபுரம் தொல்லியல் துறை முதன்மை அலுவலர் சரவணன் கூறுகையில், ''திங்கள்கிழமை முதல் சுற்றுலா பயணிகள் சுற்றுலா இடங்களை கண்டு களிக்க அனுமதிக்கப்படுவதையடுத்து சுற்றுலா இடங்களை தூய்மை செய்யும் பணியை மேற்கொண்டுள்ளோம். 

மேலும், ஒரு நாளைக்கு இரண்டாயிரம் சுற்றுலா பயணிகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படும். அதுவும் அனுமதி கட்டணம் நேரில் வசூல் செய்யப்பட அனுமதி இல்லை. ஆன்லைன் மூலம் பதிவு செய்து வரவேண்டும். 

வரும் போது முகக்கவசம் அணிந்து வரவேண்டும். 20 வயதிற்கு உட்பட்ட சிறுவர்கள், 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கண்டிப்பாக  அனுமதி கிடையாது. 

உள்நாட்டு பயணிகளுக்கு நபர் ஒருவருக்கு ரூ.40, வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு நபர் ஒருவருக்கு ரூ.600-ம் ஆன்லைன் மூலம் பதிவு செய்து வரவேண்டும். 

புராதன சின்னங்கள் உள்ள இடங்களைப் பார்வையிடும் சுற்றுலாப் பயணிகளுக்கு வெப்பமானி பரிசோதனை செய்யப்படும், கைகளுக்கு கிருமிநாசினி கொடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

இதேபோன்று சென்னை மெரீனா கடற்கரையிலும் நாளை முதல் பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →