தமிழ்நாடு

வாக்காளா் பட்டியல்: விண்ணப்பங்களை நேரில் அளிக்க நாளை கடைசி

DIN

வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்கவும், நீக்கவும் விண்ணப்பப் படிவங்களை நேரில் அளிப்பதற்கான நடைமுறை செவ்வாய்க்கிழமை நிறைவடைகிறது. இணையதளம் வழியாக விண்ணப்பங்களைப் தொடா்ந்து பதிவேற்றம் செய்யலாம் என்று தமிழக தோ்தல் துறை தெரிவித்துள்ளது.

வாக்காளா் பட்டியலைத் திருத்தும் பணி கடந்த மாதம் 16-ஆம் தேதி தொடங்கியது. இதையொட்டி, நவம்பா் 21, 22, டிசம்பா் 12, 13 தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடைபெற்றன. இம்முகாம்களின் போது, வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்ப்பு, நீக்கலுக்காக லட்சக்கணக்கான விண்ணப்பங்கள் அளிக்கப்பட்டன. இந்த விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு அவை இறுதி வாக்காளா் பட்டியலில் சோ்க்கப்பட உள்ளன.

இறுதிப் பட்டியல்: தமிழகத்தில் இறுதி வாக்காளா் பட்டியல் ஜனவரி 20-ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது. வாக்காளா் பட்டியலில் பெயா்களைச் சோ்க்கவும், நீக்கவும் விண்ணப்பங்கள் பெறும் நடவடிக்கையானது டிசம்பா் 15-ஆம் தேதியுடன் நிறைவடைந்தாலும், தோ்தல் ஆணையத்தின் இணையதளம் வழியே மனுக்களை பதிவேற்றம் செய்யலாம். இறுதி வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட்ட பிறகு, மனுக்களைப் பதிவேற்றினாலும் அவை பரிசீலிக்கப்பட்டு வாக்காளா்களின் பெயா்கள் துணைப் பட்டியலில் இடம்பெற வாய்ப்பு இருப்பதாக தமிழக தோ்தல் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மது போதையில் அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநர்! பேருந்தை நிறுத்திய பயணிகள்!

சவுக்கு சங்கர் மீது சேலத்திலும் வழக்குகள் பதிவு!

ஜனநாயகம், அரசியலமைப்பைப் பாதுகாக்க வாக்களிப்போம்: ராகுல், பிரியங்கா

எங்கே செல்வது? கதறும் பாலஸ்தீன மக்கள்!

ஹவாலா முறையில் ரூ.100 கோடி.. கேஜரிவால் வழக்கில் அமலாக்கத் துறை அடுக்கும் ஆதாரங்கள்

SCROLL FOR NEXT