தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 குறைவு
சென்னையில் திங்கள்கிழமை ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்து, ரூ.37,016-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் திங்கள்கிழமை ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்து, ரூ.37,016-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.43 ஆயிரத்தைத் தாண்டி வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டது. அதன்பிறகு, விலை குறைந்தாலும், கடந்த சில வாரங்களாக ஏற்ற, இறக்கமாக இருந்து வருகிறது.
இதன் தொடா்ச்சியாக திங்கள்கிழமை சவரனுக்கு ரூ.240 குறைந்து, ரூ.37,016-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ.30 குறைந்து, ரூ.4,627 ஆக உள்ளது.
அதேநேரத்தில் வெள்ளி விலையும் சற்று குறைந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி 30 காசுகள் குறைந்து ரூ.67.10 ஆகவும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.67,100 ஆகவும் விற்கப்படுகிறது.
திங்கள்கிழமை விலை நிலவரம்
1 கிராம் தங்கம்............................. 4,627
1 சவரன் தங்கம்...............................37,016
1 கிராம் வெள்ளி.............................67.10
1 கிலோ வெள்ளி.............................67,100
சனிக்கிழமை விலை நிலவரம்
1 கிராம் தங்கம்............................. 4,632
1 சவரன் தங்கம்...............................37,056
1 கிராம் வெள்ளி.............................66.80
1 கிலோ வெள்ளி.............................66,800