சென்னை ஐஐடியில் 100ஐ தாண்டிய கரோனா பாதிப்பு
சென்னை ஐஐடியில் கரோனா தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 100ஐ தாண்டியுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னை ஐஐடியில் கரோனா தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 100ஐ தாண்டியுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக மேலும் அவர் கூறியதாவது,
தமிழகத்தில் கரோனா நோய் பாதிப்பு குறைந்து வரும் நிலையில், சென்னை ஐஐடியில் கரோனா நோய்த்தொற்று அதிகரித்து வருவது மாணவா்களிடையே அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2 வாரங்களில் இங்கு பயிலும் 66 மாணவா்கள், 4 உணவக ஊழியா்கள் உள்பட 71 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில், ஞாயிற்றுக்கிழமை மட்டும் 32 பேருக்கு புதிதாக நோய் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
இந்நிலையில், இன்று மேலும் 33 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதையடுத்து அங்குப் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 104 ஆக உயர்ந்துள்ளது.
இதுவரை 444 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார். மாணவர்கள் அச்சமடைய தேவையில்லை. மேலும், ஐஐடியில் பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் கரோனா பரிசோதனை நிச்சயம் செய்யப்படும் என்று அவர் கூறியுள்ளார்.