நேர்மையே மக்கள் நீதி மய்யத்தின் தேர்தல் வாக்குறுதி: கமல்ஹாசன்
வருகிற சட்டப்பேரவைத் தேர்தலில் நேர்மையே மக்கள் நீதி மய்யத்தின் வாக்குறுதி என அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
வருகிற சட்டப்பேரவைத் தேர்தலில் நேர்மையே மக்கள் நீதி மய்யத்தின் வாக்குறுதி என அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
மதுரையில் நேற்று தேர்தல் பிரசாரத்தைத் துவங்கிய கமல் ஹாசன் இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்த அவர்,
சட்டப்பேரவைத் தேர்தலில் கண்டிப்பாக நான் போட்டியிடுவேன். எந்தத் தொகுதியில் போட்டியிடுவேன் என்பது பின்னர் அறிவிக்கப்படும்.
ஊழல் இல்லாத அரசை இருக்க உருவாக்க வேண்டும் என்பதே எங்கள் கொள்கை. கையூட்டு அரசாக இல்லாமல் லட்சியத்தை நோக்கிய அரசாக இருக்க வேண்டும். மேல்மட்டத்திலிருந்து ஊழலை ஒழிக்க வேண்டும்.
நாங்கள் அரசியலுக்கு வந்தது எதிர்க்கட்சியாக இருக்க அல்ல. ஆள்வதற்குத் தான்.
நேர்மை ஒன்றே மக்கள் நீதி மய்யத்தின் வாக்குறுதி. நேர்மையை வைத்து அரசியல் செய்து தேர்தலில் வெல்வேன்.
மக்கள் நீதி மய்யத்தின் ஆதரவு விவசாயிகளுக்கு எப்போதும் இருக்கும். ஏற்கெனவே எங்கள் பிரதிநிதிகள் தில்லிக்குச் சென்று விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
வேளாண் சட்டங்களால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கும். விவசாயத்துக்கு ஊறு விளைவிக்கக்கூடிய வேளாண் சட்டங்களை அரசு திரும்பப்பெற வேண்டும்' என்று பேசியுள்ளார்.