பவானிசாகர் அணை பூங்கா திறப்பு: 2வது நாளாக ஆர்வத்துடன் வந்த பார்வையாளர்கள்
கரோனா அச்சுறுத்தல் காரணமாக மூடப்பட்ட பவானிசாகர் அணைப்பூங்கா 9 மாதங்களுக்குப் பிறகு இரண்டாவது நாளாகப் பார்வையாளர்கள் ஆர்வத்துடன் வந்தனர்.
தமிழ்நாடுபவானிசாகர் அணை பூங்கா திறப்பு: 2வது நாளாக ஆர்வத்துடன் வந்த பார்வையாளர்கள்
கரோனா அச்சுறுத்தல் காரணமாக மூடப்பட்ட பவானிசாகர் அணைப்பூங்கா 9 மாதங்களுக்குப் பிறகு இரண்டாவது நாளாகப் பார்வையாளர்கள் ஆர்வத்துடன் வந்தனர்.
கரோனா அச்சுறுத்தல் காரணமாக மூடப்பட்ட பவானிசாகர் அணைப்பூங்கா 9 மாதங்களுக்குப் பிறகு இரண்டாவது நாளாகப் பார்வையாளர்கள் ஆர்வத்துடன் வந்தனர்.
ஈரோடு மாவட்ட மக்களின் பொழுதுபோக்கு அம்சமாக பவானிசாகர் அணை உள்ளது. இங்குள்ள 15 ஏக்கர் பரப்பளவில் அணை பூங்காவில் படகு இல்லம், சிறுவர் ரயில், கொலம்பஸ், ஊஞ்சல், சறுக்கு விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு வசதிகள் உள்ளன.
கரோனாவால் மூடப்பட்ட இந்த அணைப்பூங்கா திங்கள்கிழமை முதல் திறக்கப்பட்டது. இதையடுத்து ஈரோடு, திருப்பூர், கோவை, நீலகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து பவானிசாகர் அணை பூங்காவிற்கு சுற்றுலாப் பயணிகள் வந்தனர். இரண்டாவது நாளாக செவ்வாய்க்கிழமை சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்துடன் வந்தனர்.
பொதுப்பணித்துறை அதிகாரிகள் பூங்காவை சுத்தம் செய்து கொரானா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். முன்னதாக சுற்றுலாப் பயணிகளுக்கு உடல் வெப்பம் பரிசோதிக்கப்பட்டு சானிடைசர் வழங்கப்பட்டுக் கைகழுவிவிட்டு பூங்காவிற்குள் நுழையுமாறு பொதுப்பணித்துறை ஊழியர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
பூங்கா நுழைவு வாயிலில் நுழைவுச்சீட்டு கொடுக்கும் இடத்தில் இதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டு விதிமுறைகள் குறித்த போர்டு வைக்கப்பட்டுள்ளது. இரண்டாவது நாளாகப் பூங்கா திறக்கப்பட்டதால் நூற்றுக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் நுழைவுச் சீட்டு பெற்றுக்கொண்டு பூங்காவிற்குச் சென்றனர். சுற்றுலாப் பயணிகள் அணையின் இயற்கை அழகை ஆர்வத்துடன் ரசித்தனர்.