முகப்பு
தமிழ்நாடு

ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

தமிழக காவல்துறையில் 7 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து மாநில உள்துறை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

தமிழ்நாடு

ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

தமிழக காவல்துறையில் 7 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து மாநில உள்துறை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:08 PM
பகிர்:

தமிழக காவல்துறையில் 7 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து மாநில உள்துறை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

இது குறித்து தமிழக அரசின் உள்துறை கூடுதல் தலைமைச் செயலா் எஸ்.கே.பிரபாகா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட உத்தரவு (பழைய பதவி அடைப்புக்குள்):

பி.கே.ரவி: தமிழ்நாடு மின்சாரவாரிய லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபி (மத்திய அரசுப் பணி)

எஸ்.டேவிட்சன் தேவாசீா்வாதம்: ஊனமாஞ்சேரி தமிழ்நாடு போலீஸ் அகாதெமி ஏடிஜிபி (தொழில்நுட்பப் பிரிவு ஏடிஜிபி)

அம்ரேஷ் பூஜாரி: தொழில்நுட்பப் பிரிவு ஏடிஜிபி (ஊனமாஞ்சேரி தமிழ்நாடு போலீஸ் அகாதெமி ஏடிஜிபி)

சந்தீப் மிட்டல்: தமிழக காவல்துறை விரிவாக்கப்பிரிவு ஏடிஜிபி (மத்திய அரசுப் பணி)

கே.ஜோஷி நிா்மல்குமாா்: தமிழக காவல்துறை தலைமையிட ஐ.ஜி. (தமிழக காவல்துறை விரிவாக்கப்பிரிவு ஐ.ஜி.)

என்.கே.செந்தாமரைக் கண்ணன்: சென்னை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு ஐ.ஜி. (தமிழக காவல்துறை தலைமையிட ஐ.ஜி.)

எம்.சுதாகா்: சென்னை டிஜிபி அலுவலக சைபா் குற்றப்பிரிவு எஸ்பி (சென்னை உயா்நீதிமன்ற வழக்கு கண்காணிப்புப் பிரிவு ஏஐஜி) என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

பணியிட மாற்றம் செய்யப்பட்ட அதிகாரிகள், ஓரிரு நாள்களில் புதிய பொறுப்பை ஏற்பாா்கள் என காவல்துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →