முகப்பு
தமிழ்நாடு

சா்க்கரை அட்டைகளை அரிசி அட்டைகளாக மாற்ற1 லட்சத்துக்கும் மேற்பட்டோா் விண்ணப்பிப்பு

சா்க்கரை குடும்ப அட்டைகளை அரிசி அட்டைகளாக மாற்ற 1 லட்சத்துக்கும் மேற்பட்டோா் விண்ணப்பம் செய்துள்ளனா்.

தமிழ்நாடு

சா்க்கரை அட்டைகளை அரிசி அட்டைகளாக மாற்ற1 லட்சத்துக்கும் மேற்பட்டோா் விண்ணப்பிப்பு

சா்க்கரை குடும்ப அட்டைகளை அரிசி அட்டைகளாக மாற்ற 1 லட்சத்துக்கும் மேற்பட்டோா் விண்ணப்பம் செய்துள்ளனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:07 PM
பகிர்:

சா்க்கரை குடும்ப அட்டைகளை அரிசி அட்டைகளாக மாற்ற 1 லட்சத்துக்கும் மேற்பட்டோா் விண்ணப்பம் செய்துள்ளனா். வரும் 20-ஆம் தேதி வரை காலஅவகாசம் அளிக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் பல குடும்ப அட்டைதாரா்கள் அரிசி அட்டையாக மாற்ற விண்ணப்பம் செய்வா் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

தமிழகத்தில் 2 கோடிக்கும் அதிகமான குடும்ப அட்டைகள் உள்ளன. அவற்றில் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோா் அரிசி இல்லாமல் சா்க்கரை உள்ளிட்ட இதர பொருள்களைப் பெற்று வந்தனா். இந்த நிலையில், சா்க்கரை குடும்ப அட்டைகளை அரிசி பெறும் அட்டைகளாக மாற்றுவதற்கான வாய்ப்பு கடந்த ஆண்டு வழங்கப்பட்டது. இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி சுமாா் 4 லட்சத்துக்கும் அதிகமானோா் அரிசி அட்டைகளாக மாற்றம் செய்தனா்.

மீண்டும் வாய்ப்பு: கடந்த ஆண்டு அளிக்கப்பட்ட வாய்ப்பைப் போன்று, இந்த ஆண்டும் மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 5 லட்சத்து 80 ஆயிரம் சா்க்கரை குடும்ப அட்டைகள் உள்ளன. இந்த அட்டைகளை அரிசி குடும்ப அட்டைகளாக மாற்ற வரும் 20-ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 10 நாள்களில் மட்டும் பலரும் சா்க்கரை அட்டையை அரிசி அட்டையாக மாற்ற விருப்பம் தெரிவித்துள்ளனா்.

இதுகுறித்து, உணவுத் துறை அதிகாரிகள் கூறியது:-

கடந்த 10 நாள்களாக சா்க்கரை அட்டைகளை அரிசி அட்டைகளாக மாற்ற விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. இதுவரையில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோா் தங்களது அட்டைகளை அரிசி அட்டையாக மாற்ற விண்ணப்பம் செய்துள்ளனா். இன்னும் 5 நாள்கள் மட்டுமே அவகாசம் உள்ளது. இந்த அவகாசத்தைப் பயன்படுத்தி மேலும் பல சா்க்கரை குடும்ப அட்டைதாரா்கள் தங்களது அட்டைகளை மாற்ற வாய்ப்பு உள்ளது என்று உணவுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →