மக்கள் பிரச்னைக்காக ரஜினியுடன் ஒத்துழைப்பேன்: கமல்ஹாசன்
மக்கள் பிரச்னைக்காக நானும், ரஜினியும் ஒத்துழைப்போம் என்றார் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன்.
மக்கள் பிரச்னைக்காக நானும், ரஜினியும் ஒத்துழைப்போம் என்றார் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன்.
கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கமல்ஹாசன் கூறியது: எனது சுற்றுப்பயணத்துக்கு எல்லா இடங்களிலும் அனுமதி கொடுத்து, பின்னர் மறுக்கப்பட்டுள்ளது. எங்களுக்கு ஏன் முதலில் அனுமதி கொடுத்தார்கள், பின்னர் மறுத்தது ஏன்?.
வேட்பாளர்களுக்கு வெறும் பண பலம், படிப்பு மட்டும் இருந்தால் போதாது. மக்கள் சேவையில் அக்கறை இல்லாதவர்கள் வேட்பாளராக வருவதில் அர்த்தம் இல்லை. எல்லாம் ஒருங்கிணைந்து இருக்க வேண்டும். புதிதாக வருபவர்கள் ஒரு காரணத்துக்காக வருகின்றனர். நான் ஏன் வந்தேன் என்பதற்கான காரணத்தை சொல்லிவிட்டேன். ஒரு மாற்றம் வேண்டும். ரஜினியும் அதனை சொல்லிக் கொண்டிருக்கிறார். அவரது கொள்கை குறித்து இன்னும் தெளிவாகச் சொன்ன பிறகு பேசுவோம். நட்பு என்பது எங்களுக்குள் எளிதான ஒன்று. தொலைபேசியில் தொடர்புகொண்டால் கிடைக்கக் கூடியவர்கள். கொள்கைரீதியாக ஒத்துவந்தது என்றால், ஒருவருக்கு ஒருவர் உதவி செய்ய முடிந்தால் உதவி செய்வோம். அதேவேளையில் மக்கள் பிரச்னைக்காக, மக்களுக்கு நன்மை பயக்கும் என்றால் எந்த ஈகோவையும் விட்டுக் கொடுத்து ஒத்துழைப்போம் என்றார் அவர்.