வேதாரண்யத்தில் கொட்டித் தீர்க்கும் மழை
நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியால் புதன்கிழமை அதிகாலை தொடங்கி கனமழை பெய்து வருகிறது.
வேதாரண்யம்: நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியால் புதன்கிழமை அதிகாலை தொடங்கி கனமழை பெய்து வருகிறது.
புதன்கிழமை காலை 8 மணி நிலவரப்படி வேதாரண்யத்தில் 51 மி.மீட்டரும், தலைஞாயிறில் 40 மி.மீட்டரும் பதிவானது.
கடந்த வாரங்களில் பெய்த தொடர் மழையால் ஏற்பட்ட வெள்ளம் வடிந்து வரும் நிலையில் மீண்டும் மழை தொடங்கியுள்ளது. நெல் வயல்களில் மீண்டும் வெள்ளம் அதிகரித்துள்ளது.
வேதாரண்யம் வேதாரண்யேசுவரர் கோயில் மணிகர்ணிகை தீர்த்தம் நிரம்பி வழிகிறது. கோயிலின் உள்பிரகாரத்தில் தேங்கி வரும் மழைநீரை இறைவை மோட்டார்கள் மூலம் வெளியேற்ற கோயில் நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.