கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே அகரகோட்டாலம் கிராமப் பகுதியில் அமைந்துள்ள மணிமுக்தா அணையில் நீர்மட்டம்(36 அடி) நிரம்பியதால் புதன்கிழமை விவசாய பாசனத்திற்கு தண்ணீர் திறந்து வைக்கப்பட்டது.
மாநில சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் பங்கேற்று அணையிலிருந்து தண்ணீரைத் திறந்து வைத்தார்.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் கிரண்குராலா, அதிமுக மாவட்ட செயலாளர் குமரகுரு எம்எல்ஏ, கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபு, முன்னாள் அமைச்சர் மோகன், தமிழ்நாடு கூட்டுறவு சர்க்கரை ஆலை மாநிலத்தலைவர் ராஜசேகர் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அணையின் மொத்த கொள்ளளவு 736. 96 மில்லியன் கன அடி, 35.5 அடி உயரம் நிரம்பியதால் 700 கன அடி தண்ணீர் இருப்பு உள்ளது.
தற்போது இதில் 75 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இதன் மூலம் இரண்டு வாய்க்கால்கள் வழியாக புதிய பாசனப் பரப்பு 4,250, பழைய பாசன பரப்பு 1,243 ஏக்கர் விவசாய நிலப் பகுதிகள் பாசனம் பெறுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.