தமிழ்நாடு

தமிழகத்தில் திறந்தவெளியில் அரசியல், மத, பொழுதுபோக்கு கூட்டங்கள் நடத்த அனுமதி

DIN

சென்னை: தமிழகத்தில் திறந்தவெளியில் அரசியல், மத கூட்டங்கள் நடத்த அனுமதி வழங்கி முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் மேலும் கூறியிருப்பதாவது: 
டிசம்பர் 19 ஆம் தேதி முதல் கட்டுப்பாடுகளுன் திறந்தவெளியில் கல்வி, கலாச்சார, அரசியல், மதம் சார்ந்த, பொழுதுபோக்கு கூட்டங்கள் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

தனிமனித இடைவெளியை பின்பற்றி 50 சதவீத பங்கேற்பாளர்களுடன் கூட்டங்களை நடத்திக்கொள்ளலாம். அதேசமயம் இந்த கூட்டங்களுக்கு மாவட்டங்களில் சம்மந்தப்பட்ட ஆட்சியர்களிடமும், சென்னை மாநகராட்சியில் காவல் ஆணையரிடமும் அனுமதி பெறுவது அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் பொதுமக்கள் வெளியே செல்லும்போதும், பொது இடங்களிலும் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும். வீட்டிலும், பணிபுரியும் அலுவலகங்களிலும் அடிக்கடி சோப்பை பயன்படுத்தி கை கழுவ வேண்டும், தனி மனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். 

தொற்று பரவலை கட்டுப்படுத்த அரசு எடுத்து வரும் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகள் அனைத்திற்கும் மக்கள் தொடர்ந்து முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என முதல்வர் பழனிசாமி கேட்டுக்கொண்டுள்ளார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதையல் எடுத்து தருவதாக ரூ. 6 லட்சம் மோசடி: 2 பேர் கைது!

மலர் அங்கி அலங்காரத்தில் அருள்பாலித்த கெளமாரியம்மன்!

பிரதமர் மோடிக்கு எதிரான புகார்: 1 வாரத்தில் தேர்தல் ஆணையத்திடம் பதிலளிக்கப்படும் -பாஜக

திருமண விழாவிற்குச் சென்றவர்களுக்கு நேர்ந்த சோகம்: 6 பேர் பலி!

கோவை தோ்தல் முடிவை வெளியிட தடை கோரிய வழக்கு தள்ளுபடி

SCROLL FOR NEXT