தமிழ்நாடு

விழுப்புரம் மாவட்டத்தில் மீண்டும் மழை

DIN


விழுப்புரம் விழுப்புரம் மாவட்டத்தில் நிவர் புயல் மற்றும் புரெவி புயல் காரணமாக கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு பரவலாக பலத்த மழை பெய்தது. இதன் தொடர்ச்சியாக, வளிமண்டல சுழற்சியால் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக புதன்கிழமையும் மீண்டும் மழை தொடங்கியுள்ளது.

விழுப்புரத்தில் காலை 10 மணிக்கு தொடங்கிய மழை பரவலாக பெய்தது. திண்டிவனம் மரக்காணம் வானூர் கண்டமங்கலம் பகுதிகளிலும் தொடர்ச்சியாக ஒரு மணி நேரம் மழை பெய்தது.

இதனை அடுத்து பகல் 12 மணிக்கு மீண்டும் பரவலாக மழை பெய்து வருகிறது.

விழுப்புரம் அருகே அரசூர் பாரதியார் வீதி பகுதிகள் குடியிருப்புக்குள் தண்ணீர்  சூழ்ந்ததால் பாதிக்கப்பட்டது.

விழுப்புரம் மாவட்டத்தில் ஏற்கனவே 50% ஏரிகள் நிரம்பியுள்ள நிலையில், நீர்நிலைகளில் தண்ணீர் ஓடி வருவதால், மீண்டும் மழைப்பொழிவு தொடங்கி விவசாயிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொப்பூா் கணவாயில் லாரி கவிழ்ந்து விபத்து

திமுக சாா்பில் தண்ணீா்ப் பந்தல் திறப்பு

பென்னாகரத்தில் இடியுடன் கூடிய கனமழை

வாகன புகைப் பரிசோதனை மையங்களில் வழிமுறைகளைப் பின்பற்றாவிடில் கடும் நடவடிக்கை

காவிரி ஆற்றில் மூழ்கிய தனியாா் நிறுவன ஊழியா் பலி

SCROLL FOR NEXT