முகப்பு
தமிழ்நாடு

ஹைவேவிஸ் மலைக் கிராமத்தில் காட்டு யானை மிதித்து கூலித் தொழிலாளி பலி

தேனி மாவட்டம் ஹைவேவிஸ் மலைக் கிராமத்தில் செவ்வாய்க்கிழமை, காட்டு யானை மிதித்து தேயிலைத் தோட்ட கூலித்தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:08 PM
ஹைவேவிஸ் மலைக் கிராமத்தில் காட்டு யானை மிதித்து கூலித் தொழிலாளி பலி
பகிர்:


உத்தமபாளையம்: தேனி மாவட்டம் ஹைவேவிஸ் மலைக் கிராமத்தில் செவ்வாய்க்கிழமை, காட்டு யானை மிதித்து தேயிலைத் தோட்ட கூலித்தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார். மறுநாள் புதன்கிழமை காலை 10 மணி வரையில் உடலை மீட்காத நிலையில் அதே இடத்தில் சடலம் கிடப்பதால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

ஹைவேவிஸ் பேரூராட்சியில் 7 மலைக் கிராமங்கள் உள்ளன. 8 ஆயிரம் பேர் வசிக்கும் நிலையில் பெரும்பான்மையோர் தேயிலைத் தோட்டத்தில் கொளுந்துபரித்தல், மருந்து அடித்தல், உரம் போடுதல் என பல்வேறு கூலி வேலை செய்கின்றனர். இதற்கிடையே, இந்த மலைக்கிராம குடியிருப்பு பகுதிகளில் யானை நடமாட்டம் கடந்த சில மாதங்களாகவே இருந்தாக அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் வனத்துறையிடம் தொடர்ந்து புகார் தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில், மணலார் எஸ்டேட் பகுதியைச் சேர்ந்த அம்மாவாசி(58). மனைவி மற்றும் மகன், மாற்றுத்திறனாளி மகள் உள்ளனர். செவ்வாய்க்கிழமை தேயிலைத்தோட்டத்திற்கு உரம் போட்டு விட்டு மீண்டும் வீடு திரும்பியுள்ளார். அப்போது தேயிலைத் தோட்டத்தில் இருந்த ஒற்றை காட்டு யானை ஒன்று தாக்கி காலால் மிதித்ததில் சம்பவ இடத்திலே பரிதாபமாக இறந்து விட்டதாக அப்பகுதி மக்கள் ஹைவேவிஸ் போலீசார் மற்றும் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

இது குறித்து தகவவின் பேரில் சம்பவயிடத்திற்கு சென்ற சின்னமனூர் வனச்சரக அதிகாரிகள் விசாரித்தனர். காவல்துறை சார்பில் கீழ்மட்ட ஊழியர்கள் மட்டுமே வந்து சென்றுள்ளனர்.

ஹைவேவிஸ் போலீசார் அலட்சியம்: விபத்து நடந்து 18 மணி நேரத்திற்கு மேலாகியும் சம்மந்தப்பட்ட இடத்திற்கு ஹைவேவிஸ் போலீஸ் உயர் அதிகாரிகள் யாரும் இதுவரை செல்லவில்லை. உடலை மீட்பதற்கான எவ்வித முயற்சியும் எடுக்காத நிலையில் அப்பகுதி பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

எனவே மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து   இரவு முழுவதும் இறந்து கிடக்கும் கூலித் தொழிலாளியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கும்படி அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →