முகப்பு
தமிழ்நாடு

தமிழக மீனவர்கள் 36 பேரை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக்கோரி பிரதமருக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம்

இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் 36 பேரை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு, முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:08 PM
முதல்வர் பழனிசாமி
பகிர்:

இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் 36 பேரை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு, முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். 
எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி தமிழக மீனவர்கள் 36 பேரை இலங்கை கடற்படை அண்மையில் கைது செய்தது. மேலும் மீனவர்களின் படகுகளையும் அவர்கள் பறிமுதல் செய்தனர். 
இந்த நிலையில் இவ்விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். 
இதுகுறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில், இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களைச் சேர்ந்த 36 தமிழக மீனவர்கள் மற்றும் 5 படகுகளை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 
பிரதமர் தனிப்பட்ட முறையில் நேரடியாக தலையிட்டு மீனவர்களை மீட்க வெளியுறவுத்துறை மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →