முகப்பு
தமிழ்நாடு

குடிநீர் கேட்டு பல்லடம் ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்கள்

பல்லடம் ஒன்றியம் கே.கிருஷ்ணாபுரம் ஊராட்சி நெசவாளர் காலனியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் காலி குடங்களுடன் பல்லடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை வியாழக்கிழமை முற்றுகையிட்டனர்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:08 PM
பல்லடம் ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்கள்
பகிர்:

திருப்பூர் மாவட்டம் பல்லடம் ஒன்றியம் கே.கிருஷ்ணாபுரம் ஊராட்சி நெசவாளர் காலனியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் காலி குடங்களுடன் பல்லடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை வியாழக்கிழமை முற்றுகையிட்டனர்.

தங்களது பகுதிக்கு அத்திக்கடவு குடிநீர் பேருந்து நிறுத்தம் சாலை வசதி வேண்டுமென வலியுறுத்தினர். அவர்களிடம் வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பொதுமக்களின் கோரிக்கை குறித்து நேரில் கள ஆய்வு செய்ய வட்டார வளர்ச்சி அலுவலர் வருவதாக உறுதி அளித்தார். அதனை ஏற்றுப் பொதுமக்கள் போராட்டத்தைக் கைவிட்டுக் கலைந்து சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.