ஓய்வுபெற்ற நீதிபதி கர்ணணின் ஜாமீன் மனு தள்ளுபடி
ஓய்வுபெற்ற நீதிபதி கர்ணணின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஓய்வுபெற்ற நீதிபதி கர்ணணின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.
சென்னை, கொல்கத்தா உயர்நீதிமன்றங்களில் நீதிபதியாக இருந்த கர்ணன், நீதிபதிகளையும், நீதித்துறை ஊழியர்களையும் அவதூறாகப் பேசியதாக புகார் தெரிவிக்கப்பட்டது.
இதுதொடர்பாக நீதிமன்றத்த்தில் தொடரப்பட்ட வழக்கில், 'முன்னாள் நீதிபதி கர்ணனை ஏன் இன்னும் கைது செய்யவில்லை?' என்று நீதிமன்றம் கேட்கவே சென்னை ஆவடியில் கடந்த டிச.2 ஆம் தேதி, மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீஸாரால் கர்ணன் கைது செய்யப்பட்டு சைதாப்பேட்டை கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில் தனக்கு ஜாமீன் கோரி முன்னாள் நீதிபதி கர்ணன் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இம்மனு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது கர்ணனின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது. அத்துடன் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார்கவுன்சில் தொடர்ந்த வழக்கு ஜன.22ஆம் தேதிக்கு ஒத்தி கைக்கப்பட்டது.