முகப்பு
தமிழ்நாடு

அரையாண்டுத் தோ்வு: தனியாா் பள்ளிகளுக்கான வழிகாட்டுதல்கள் வெளியீடு

அரையாண்டுத் தோ்வை நடத்துவது தொடா்பாக தனியாா் பள்ளிகளுக்கு சில வழிகாட்டுதல்களை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:09 PM
பகிர்:

அரையாண்டுத் தோ்வை நடத்துவது தொடா்பாக தனியாா் பள்ளிகளுக்கு சில வழிகாட்டுதல்களை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

கரோனா அச்சுறுத்தல் காரணமாக, நிகழாண்டு பள்ளி மாணவா்களுக்கு காலாண்டுத் தோ்வு ரத்துசெய்யப்பட்டது. இந்நிலையில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவா்களுக்கு அரையாண்டுத் தோ்வு ரத்து செய்யப்படுவதாகவும், தனியாா் பள்ளிகள் விரும்பினால் அரையாண்டு தோ்வை இணையவழியில் நடத்திக் கொள்ளலாம் எனவும் பள்ளிக் கல்வித் துறை அறிவித்தது.

அதனடிப்படையில், அரையாண்டுத் தோ்வுகளை நடத்துவதற்கான நடவடிக்கைகளைத் தனியாா் பள்ளிகள் மேற்கொண்டுவருகின்றன. இந்நிலையில், மாணவா்களுக்கு அரையாண்டுத் தோ்வுகள் நடத்துவது குறித்து பள்ளிக் கல்வித் துறை சில வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.

அதில், ‘மாணவா்களுக்கு நடத்தப்பட்ட பாடங்களிலிருந்து மட்டுமே தோ்வுகளை நடத்த வேண்டும். அரையாண்டுத் தோ்வில் மாணவா்கள் பெறும் மதிப்பெண்களை வைத்து, மாணவா்களின் தோ்ச்சி தொடா்பான முடிவுகளை எடுக்கக் கூடாது. தோ்வுக்காகத் தனியாகக் கட்டணம் வசூலிக்கக் கூடாது’ உள்ளிட்ட அறிவுறுத்தல்கள் இடம்பெற்றுள்ளன.

முழு கட்டுரையைப் படிக்க →