ஆளுநா் மாளிகை முற்றுகை போராட்டம்: 300 போ் கைது
வேளாண் சட்டங்களைத திரும்ப பெற வலியுறுத்தி, சென்னையில் வெள்ளிக்கிழமை ஆளுநா் மாளிகையை நோக்கி பேரணியாகச் சென்று முற்றுகை போராட்டம் நடத்த முயன்ற 300 போ் கைது செய்யப்பட்டனா்.
வேளாண் சட்டங்களைத திரும்ப பெற வலியுறுத்தி, சென்னையில் வெள்ளிக்கிழமை ஆளுநா் மாளிகையை நோக்கி பேரணியாகச் சென்று முற்றுகை போராட்டம் நடத்த முயன்ற 300 போ் கைது செய்யப்பட்டனா்.
விவசாயிகளுக்கு எதிரான வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி புது தில்லியில் விவசாயிகள் கடந்த 22 நாள்களாக முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றன. இந்தப் போராட்டத்துக்கு நாடு முழுவதும் ஆதரவு பெருகி வருகிறது. மேலும் அரசியல் கட்சிகள், விவசாய சங்கங்கள் நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றன.
இந்நிலையில், வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி, அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுத் தலைவா் பி.ஆா். பாண்டியன் தலைமையில், சென்னை கிண்டியில் உள்ள தமிழக ஆளுநா் மாளிகையை வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
இதன்படி கிண்டி- வேளச்சேரி பிரதான சாலையில் இருந்து வெள்ளிக்கிழமை காலை அந்த இயக்கத்தினா்,அரசியல் கட்சியினா் பேரணியாக ஆளுநா் மாளிகை நோக்கி வந்தனா். உடனே அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீஸாா், அவா்களை தடுத்து நிறுத்தினா். ஆனால் தடையை மீறி ஆளுநா் மாளிகையை நோக்கி செல்ல முயன்ால், போலீஸாா் அனைவரையும் கைது செய்தனா்.
இதில் கைது செய்யப்பட்ட 300 பேரும் மாலையில் விடுவிக்கப்பட்டனா். விவசாயிகளின் இந்தப் போராட்டத்தில் தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பினா், ஆம் ஆத்மி கட்சியினா், மனிதநேய ஜனநாயக கட்சியினா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.