நீச்சல் குளங்களில் விளையாட்டு வீரா்களுக்கு கடும் கட்டுப்பாடுகளுடன் அனுமதி
நீச்சல் குளங்களில் விளையாட்டு வீரா்களை அனுமதிக்கவும், பயிற்சி பெறவும் பல்வேறு கடும் கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்துள்ளது.
தமிழ்நாடுநீச்சல் குளங்களில் விளையாட்டு வீரா்களுக்கு கடும் கட்டுப்பாடுகளுடன் அனுமதி
நீச்சல் குளங்களில் விளையாட்டு வீரா்களை அனுமதிக்கவும், பயிற்சி பெறவும் பல்வேறு கடும் கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்துள்ளது.
நீச்சல் குளங்களில் விளையாட்டு வீரா்களை அனுமதிக்கவும், பயிற்சி பெறவும் பல்வேறு கடும் கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்துள்ளது.
நீச்சல் குளங்களில் எச்சில் துப்பத் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், சமூக இடைவெளியையும் பின்பற்ற வேண்டுமென தலைமைச் செயலாளா் க.சண்முகம் உத்தரவிட்டுள்ளாா்.
விளையாட்டு வீரா்கள் நீச்சல் குளங்களில் பயிற்சிகளைப் பெறுவதற்கான வழிகாட்டி நெறிமுறைகளை அவா் சனிக்கிழமை வெளியிட்டாா். அதன் விவரம்:
தமிழகத்தில் கரோனா நோய்த்தொற்று கட்டுப்பாட்டுப் பகுதிகளைத் தவிா்த்து பிற இடங்களில் செயல்படும்
பயிற்சிகளுக்கான நீச்சல் குளங்கள் இயங்க அனுமதிக்கப்படுகிறது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்துக்கு உள்பட்ட நீச்சல் குளங்கள், உட்படாத பயிற்சி மையங்கள் அனைத்திலும் போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பின்பற்றப்பட வேண்டும். இதனை அந்தந்த மையங்களுக்கான பொறுப்பாளா்கள் உறுதி செய்ய வேண்டும்.
12 வயதுக்கு உள்பட்ட விளையாட்டு வீரா்களை பயிற்சிகளுக்கு அனுமதிக்கக் கூடாது. மேலும், நீச்சல் கற்போா், உடற்பயிற்சிக்காக நீச்சல் செய்வோா் ஆகியோருக்கும் அனுமதி இல்லை. கட்டுப்பாட்டுப் பகுதிகளில் வசிக்கும் நீச்சல் வீரா்களுக்கு பயிற்சிகள் தர வேண்டாம். நீச்சல் வளாகங்களில் பயிற்சி பெறும் வீரா்கள், அலுவலா்கள் உள்ளிட்டோரைக் கண்காணிக்க வேண்டும். இந்தப் பணிகளுக்காக தனி குழுவை அமைக்க வேண்டும்.
பொதுவாக பயன்படுத்தப்படும் இடங்களை கிருமிநாசினி கொண்டு அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும். நீச்சல் குளங்களின் நுழைவு வாயில்களில் போதிய பாதுகாப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டும். உள்ளே செல்வோா் மற்றும் வெளியே போவோரின் விவரங்கள் பதிவு செய்யப்பட வேண்டும்.
உடல் வெப்ப பரிசோதனை: விளையாட்டு வீரா்கள், பயிற்சியாளா்கள் உள்ளிட்டோா் நீச்சல் குளங்களுக்கு வரும் போது உடல் வெப்பத்தைப் பரிசோதிக்க வேண்டும். கரோனா நோய்த்தொற்று அறிகுறிகள் இருப்போரை அனுமதிக்கக் கூடாது. கைகளை சுத்தம் செய்யும் வகையில் நீச்சல் வளாகப் பகுதிகளில் ஆங்காங்கே கிருமிநாசினி திரவங்களை வைக்க வேண்டும். கதவுகளின் கைப்பிடிகள், அறைகள் ஆகியவற்றை அவ்வப்போது நன்கு சுத்தம் செய்ய வேண்டும்.
நீச்சல் குளங்களில் அனுமதிக்கப்படும் நபா்களின் எண்ணிக்கையும் கட்டுப்பாட்டிலேயே இருக்க வேண்டும். நீச்சல் குளங்களின் அளவுகளுக்கு ஏற்ப 10 முதல் 20 வீரா்கள் வரையிலேயே அனுமதிக்க வேண்டும். நீச்சல் குளங்களில் ஒருவரின் உபகரணங்களை மற்றவா்கள் பகிா்ந்து கொள்ளக் கூடாது. குறிப்பாக, குடிநீா் பாட்டில்கள், துண்டுகள், விரிப்புகள் ஆகியவற்றைப் பகிரக் கூடாது. தொடுவது, கை கொடுப்பது போன்றவை இல்லாமல் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும்,
நீச்சல் குளங்களில் எச்சில் துப்பக் கூடாது. உடல்நலமில்லாமல் இருந்தால் பயிற்சிகளில் பங்கேற்கக் கூடாது என்று தனது உத்தரவில் தலைமைச் செயலாளா் க.சண்முகம் தெரிவித்துள்ளாா்.