உத்தமபாளையம் பேருந்து நுழைவுவாயிலில் குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பு.  
தமிழ்நாடு

உத்தமபாளையம் தேசிய நெடுஞ்சாலையில் அடிக்கடி உடையும் குடிநீர் குழாய்

தேனி மாவட்டம் உத்தமபாளையம் காந்திஜி பேருந்து நிலையம் முன் அடிக்கடி குடிநீர் குழாய் உடைப்பு ஏற்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.

DIN


உத்தமபாளையம்: தேனி மாவட்டம் உத்தமபாளையம் காந்திஜி பேருந்து நிலையம் முன் அடிக்கடி குடிநீர் குழாய் உடைப்பு ஏற்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.

உத்தமபாளையம் பேரூராட்சியில் பொது மக்களுக்கு தேவையான குடிநீர் இணைப்புகளை சாலையின் வழியாக  பூமிக்கு கீழ் பாதித்து கொண்டு செல்கின்றனர். அதன்படி பேருந்து நிலையம், புறவழிச்சாலை சந்திப்பு, கிராம சாவடி என முக்கிய சாலைகள் வழியாக செல்லும் குடிநீர் குழாய்களில் அடிக்கடி உடைப்பு ஏற்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். 

அதன்படி, காந்திஜி பேருந்து நிலையம் முன்பாக சனிக்கிழமை காலை முதல் குடிநீர்க் குழாயில் ஏற்பட்ட உடைப்பால் அதிலிருந்து வெளியேறிய குடிநீர் சாலையில் பெருக்கெடுத்து சென்றது. பொதுமக்கள் புகாரை தொடர்ந்து தற்போது சீரமைப்பு பணி நடைபெற்று வருகிறது.

இதுபோன்று அடிக்கடி குடிநீர் குழாயில் ஏற்படும் அடைப்புகளை தடுத்து நிரந்தரமாக சீரமைக்க வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

போதைப்பொருள் கடத்தல் நாடுகள் பட்டியலில் இந்தியா! டிரம்ப் அறிவிப்பு!

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து குறைந்தது!

புர்ஜ் கலிஃபாவில் மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்து!

வன்னியா் இடஒதுக்கீடு கோரி டிச.17-இல் சிறை நிரப்பும் போராட்டம்: அன்புமணி

அணுஆயுத அச்சுறுத்தலுக்கு இந்தியா அஞ்சாது: பிரதமா் மோடி

SCROLL FOR NEXT