கந்தர்வகோட்டையில் தூங்கும் மின்சார வாரியத்தை எழுப்ப சங்கு ஊதி ஆர்ப்பாட்டம் செய்யும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் . 
தமிழ்நாடு

கந்தர்வகோட்டையில் தூங்கும் மின்சார வாரியம்: சங்கு ஊதி எழுப்பும் ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் 

கந்தர்வகோட்டையில் பழுதடைந்த மின் கம்பத்தை மாற்றி தராமல் கோரிக்கை மீது நடவடிக்கை எடுக்காமல் தூங்கி வரும் மின்சார வாரியத்தை எழுப்புவதற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சங்கு ஊதி ஆர்ப்பாட்டம் செய்யப்

DIN


கந்தர்வகோட்டை :  கந்தர்வகோட்டையில் பழுதடைந்த மின் கம்பத்தை மாற்றி தராமல் கோரிக்கை மீது நடவடிக்கை எடுக்காமல் தூங்கி வரும் மின்சார வாரியத்தை எழுப்புவதற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சங்கு ஊதி ஆர்ப்பாட்டம் செய்யப்பட்டது.

கந்தர்வகோட்டை ஒன்றியம் வெள்ளாள விடுதி கிராமத்தில் பழுதடைந்த மின்கம்பங்களை மாற்றித்தரக்கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இரண்டு முறை போராட்டம் அறிவித்து, சமாதான கூட்டத்தில் நடவடிக்கை எடுக்க உறுதி கூறிய மின்சார வாரிய அலுவலர்கள் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி தூங்கும் மின்சார வாரியத்தை எழுப்பும் விதமாக சங்கு ஊதி எழுப்பும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

ஆர்ப்பாட்டத்திற்கு என்.வீராச்சாமி தலைமை வகித்தார், எஸ்.காளிமுத்து முன்னிலை வகித்தார், எஸ்.ராஜேந்திரன் ஆர்பாட்டத்தை துவக்கி வைத்தார். மாவட்டச் செயலாளர் மு. மாதவன் இரண்டு முறை அகவாசம் கூறியும் பழுதடைந்த மின்கம்பங்களை மாற்றி தர மறுக்கும் மின்சார வாரிய அதிகாரிகளை கண்டித்து பேசினார். 

சங்கு ஊதி ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய செயலாளர் உ. அரசப்பன் , ஜி. நகராஜ் , சங்கர், கே. அம்பிக பதி , டி. அம்பல் ராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நடிகையிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார் சீமான்!

நாகமலை குன்று 4-வது உயிரியல் பாரம்பரிய தளமாக அறிவிப்பு

கரூர் பலி: தவெக மேல்முறையீட்டு மனு அக். 10ல் விசாரணை!

அகமதாபாத்தில் வங்கி மோசடி: 3 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!

கவின் - நயன்தாரா படத்தின் அப்டேட்!

SCROLL FOR NEXT