முகப்பு
தமிழ்நாடு

ஓமலூர் அருகே அம்மா சிறு மருத்துவமனையில் பரிசோதனை செய்து கொண்ட அதிமுக எம்எல்ஏ

சேலம் மாவட்டம் ஓமலூரில் முதல் நபராக அம்மா சிறு மருத்துவமனையில் அதிமுக எம்எல்ஏ வெற்றிவேல் மருத்துவப் பரிசோதனை செய்து கொண்டார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:10 PM
ஓமலூர் அம்மா சிறு மருத்துவமனையில் பரிசோதனை செய்து கொண்ட அதிமுக எம்எல்ஏ வெற்றிவேல்
பகிர்:

சேலம் மாவட்டம் ஓமலூர் சட்டப்பேரவைத் தொகுதியில் முதல் அம்மா சிறு மருத்துவமனை திறப்பு விழா காடையாம்பட்டி அருகே உள்ள கொங்குபட்டியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஓமலூர் சட்டப்பேரவை உறுப்பினர் வெற்றிவேல் கலந்துகொண்டு அம்மா சிறு மருத்துவமனையை திறந்து வைத்தார்.

பின்னர் முதல் நபராக அம்மா சிறு மருத்துவமனையில் அதிமுக எம்எல்ஏ வெற்றிவேல் மருத்துவப் பரிசோதனை செய்து கொண்டார். அவருக்கு பணியிலிருந்த மருத்துவர் ரத்த அழுத்த பரிசோதனை செய்தார்.

இதனைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அதிமுக எம்எல்ஏ வெற்றிவேல்,

ஏழை எளிய மக்களின் உடல்நலனில் அக்கறை கொண்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அம்மா சிறு மருத்துவமனையை தொடங்கியுள்ளதாகவும் ஓமலூர் சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட 20 இடங்களில் அம்மா சிறு மருத்துவமனைகள் தொடங்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் ஓமலூர் தொகுதி முன்னாள் எம்எல்ஏ பல்பாக்கி கிருஷ்ணன், ஒன்றியச் செயலாளர்கள் சுப்பிரமணி, சேரன் செங்குட்டுவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

முழு கட்டுரையைப் படிக்க →